Load Image
Advertisement

திருச்சி சிவா வீடு, காரை சேதப்படுத்திய அமைச்சர் நேரு ஆதரவாளர்கள்: திமுக.,வில் டிஷ்யூம் டிஷ்யூம்

Supporters of Minister Nehru vandalized Sivas house, car in Trichy: DMK Dissume   திருச்சி சிவா வீடு, காரை சேதப்படுத்திய அமைச்சர் நேரு ஆதரவாளர்கள்: திமுக.,வில் டிஷ்யூம் டிஷ்யூம்
ADVERTISEMENT

திருச்சி: திருச்சியில் திமுக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எம்.பி., திருச்சி சிவா ஆகியோரின் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தது. இதனையடுத்து சிவாவின் கார் மற்றும் வீட்டினை நேருவின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர்.
Latest Tamil News

திருச்சி சிவா திமுக எம்.பி.,யாக உள்ளார். இவரது வீட்டின் அருகே உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதான திறப்பு விழா இன்று (மார்ச் 15) நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழில் எம்.பி.,யின் பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Latest Tamil News

அமைச்சர் கே.என்.நேரு திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது, சிவாவின் ஆதரவாளர்கள், கே.என்.நேருவிற்கு எதிராக கோஷமிட்டதாக தெரிகிறது. நேருவின் காரையும் வழிமறித்தனர்.

Latest Tamil News

ஆத்திரமடைந்த நேருவின் ஆதரவாளர்கள் மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள், சிவா வீட்டிற்கு வந்து, கார் மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தினர்.
Latest Tamil News

அங்கிருந்த போலீசாரும் தடுக்கவில்லை என கூறப்படுகிறது. அமைச்சரின் காரை மறித்த சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News


போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தாக்குதல்





கைது செய்யப்பட்ட திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கும் வந்த நேருவின் ஆதரவாளர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து சிவாவின் ஆதரவாளர்களை தாக்கினர். இதில் அவர்களை தடுத்த பெண் போலீஸ் ஒருவரை கீழே தள்ளியதில் அவர் காயமடைந்தார்.

கைது



இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளரான திருப்பதியை போலீசார் கைது செய்தனர்.



வாசகர் கருத்து (57)

  • Soumya - Trichy,இந்தியா

    ஹாஹாஹா ஆண்டவருக்கு தலைப்பு கெடச்சிருச்சி...ரவுடிக்குள் ரவுடி ...

  • Ganeshan R - coimbatore,இந்தியா

    திருச்சியை சேர்ந்த ரவுடி கும்பலின் இருபிரிவினர் தங்களுக்குள் மோதிக்கொண்டனர்.

  • எஸ் எஸ் -

    திமுக தலைமையிடம் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது

  • சீனி - Bangalore,இந்தியா

    அண்ணே இவ்ளோ பிளாஸ்டிக் சேர் அடுக்கி வெச்சிருக்கானுங்களே, வரவேற்பு பலமா இருக்கும் போலன்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன்... ஹாஹாஹா....

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    நேருவின் ஆதரவாளர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து சிவாவின் ஆதரவாளர்களை தாக்கினர். அடுத்தவர் அடித்துக்கொண்டால் உடனே அவர்கள் அனைவரும் கைது..அப்படி கைதுக்கு செய்றாலும் பிறகு சமரசம் பேசி அவர்கள் அனைவரும் விடுவிப்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்