Load Image
Advertisement

27ல் சென்னை விமான நிலைய புதிய முனையம் திறப்பு

Chennai Airports new terminal opens on 27   27ல் சென்னை விமான நிலைய புதிய முனையம் திறப்பு
ADVERTISEMENT
சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன முனையத்தை, வரும் 27ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது. இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், பயணியரின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து, 3.5 கோடியாக அதிகரிக்கும்.

இந்த புதிய முனையத்தின் கீழ் தளத்தில், பயணியர் உடைமைகள் கையாளப்பட உள்ளன. முதல் தளத்தில் சர்வதேச வருகை பயணியருக்கான வழக்கான நடைமுறைகள்; இரண்டாவது தளத்தில், பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம், ஐந்து தளங்கள் இந்த புதிய முனையத்தில் அமைகின்றன.

Latest Tamil News
புதிய விமான முனையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டன. பொருத்தப்பட்டுள்ள கருவிகள், உபகரணங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் திறக்கப்பட இருந்த நிலையில், பிரதமரின் அனுமதி முன்கூட்டியே கிடைத்திருப்பதால், வரும் 27ம் தேதி, புதிய முனையம் திறப்பு விழா நடக்கிறது.

டில்லியில் இருந்து 27ம் தேதி காலை ராமேஸ்வரம் வரும் பிரதமர், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை முடித்து, சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் நடக்கும் விழாவில், புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார்.


வாசகர் கருத்து (19)

  • venugopal s -

    இவர் அடிக்கல் நாட்டிய ஒரு மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையே போதும் தமிழகத்துக்கு !

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    பிரதமர் அவர்களே ராமேஸ்வரம் காசி வாராந்திர சிறப்பு ரயிலை மதுரை வழியாக வாரம் இருமுறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • Ramanathan Muthiah - Madras,இந்தியா

    திறக்கும் போது 👆🏿 முத்துவேல் கலைஞர் கருணாநிதி முனையம் என்று திறந்து வைப்பாரா அல்லது சென்னை பண்ணாட்டு விமான நிலையம் என்றே திறந்து வைப்பாரா ⁉️🫂 எது எப்படியோ.. நம் மாநிலத்திற்கு நன்மைகள் நடந்தால் மிக சிறப்பு ‼️ வாழ்க பாரதம் 👍🏼👍🏼🇮🇳🇮🇳🇮🇳

  • THANGARAJ - CHENNAI,இந்தியா

    பிரதமர் மோடி அவர்கள், உலகை ஊற்றும் வாலிபர் என்றும் + மற்றுமொரு பட்டமாக "திறப்பு விழா மைந்தர்" எனவும் கொடுக்கபடுகிறது.

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    சேலம் திருச்சி மதுரை கோவை விமான நிலையங்கள் சென்னை விமான நிலையம் அளவுக்கு வளர்ச்சி அடைய வேண்டும். சென்னைக்கு புதிய விமான நிலையம் தேவை இல்லை. பயணிகளின் முழு பயண விபரங்கள் கணக்கெடுத்தால் இது நன்றாக புரியும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்