Load Image
Advertisement

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்னை சென்ற பெல்லி

Belli went to Chennai to meet the Chief Minister   முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்னை சென்ற பெல்லி
ADVERTISEMENT
கூடலுார்: 'ஆஸ்கார்' விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த, பழங்குடியின பெண் பெல்லி, முதல்வரைச் சந்திக்க, ரயிலில் நேற்று சென்னை சென்றார்.

நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் ரகு, பொம்மி குட்டியானைகள், அவற்றைப் பாசத்தோடு வளர்த்த பழங்குடி தம்பதி இடையே உள்ள உறவை மையமாக வைத்து, 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண படம் இயக்கப்பட்டுள்ளது.

ஊட்டியை சேர்ந்த கார்த்திகி இயக்கிய இந்த ஆவணப்படம் ஆஸ்கார் விருதை வென்றது. இதில் நடித்த பாகன் பொம்மன், மனைவி பெல்லிக்கு பாராட்டுகள் குவிகின்றன. பாகனையும், பெல்லியையும் முதல்வர் ஸ்டாலின் அழைத்து இன்று நேரில் பாராட்டுகிறார்.

இதற்காக, கூடலுார் வருவாய்த்துறையினர் பெல்லியை நேற்று சென்னைக்கு அழைத்துச் சென்றனர். தெப்பக்காட்டில் இருந்து, மகள் மஞ்சுவுடன் மைசூரு சென்ற பெல்லி, 'வந்தே பாரத்' ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தன் முதல் ரயில் பயணம் அளவிட முடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, பெல்லி தெரிவித்தார்.

மேலும், முதுமலை மற்றும் ஆனைமலை யானைகள் முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு, மாநில அரசு தலா, 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. இதற்காக, முதுமலையில் இருந்து மூன்று யானைப் பாகன்கள், இரண்டு உதவியாளர்கள் சென்னை சென்றுள்ளனர்.

பாகன் பொம்மன், தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகளின் குட்டியை, யானைகளுடன் சேர்த்து வைக்க, தர்மபுரி சென்றுள்ளார். அவர், அங்கிருந்து சென்னைக்குச் செல்கிறார்.

போனில் பாராட்டிய இ.பி.எஸ்.,

கூடலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் நேற்று பெல்லியின் வீட்டுக்கு நேரில் சென்று, அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.தொடர்ந்து, அவரின் மொபைல் போனில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, பெல்லியை தொடர்பு கொண்டு, 'ஆஸ்கார் விருது கிடைத்ததுக்கும் வாழ்த்துக்கள்; இது, மிகப் பெரிய சாதனை. இதன் மூலம் தமிழகத்துக்கும் மிக பெரிய பெருமை சேர்த்துள்ளீர்கள்' என பாராட்டினார்.



வாசகர் கருத்து (16)

  • பெரிய ராசு - தென்காசி ,இந்தியா

    அந்த விடிய மொஞ்சய எதுக்குமே பார்க்க போறே

  • Bhakt - Chennai,இந்தியா

    ஸ்டிக்கர் ஒட்டும் முயற்சி

  • Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    எதிரிகளை மன்னிக்கலாம். ஆனால் துரோகிகளை மன்னிக்க கூடாது.

  • Raja - Coimbatore,இந்தியா

    Success has many fathers. Failure is an Orphan.

  • W W - TRZ,இந்தியா

    ஊங்கள் அயராத பணிக்கு கிடைத்த வெற்றி, இதில் பங்கு பெற்ற அனைவருக்கும், மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement