Load Image
Advertisement

அரசில் 10 ஆண்டு வேலை செய்தால் பணி நிரந்தரம்: புதுச்சேரி முதல்வர்

If you work in government for 10 years, your job will be permanent   அரசில் 10 ஆண்டு வேலை செய்தால் பணி நிரந்தரம்: புதுச்சேரி முதல்வர்
ADVERTISEMENT
புதுச்சேரி : ‛அரசில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று ஜீரோ நேரத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் பேசும்போது, 'கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கதிர்காமம் மருத்துவக்கல்லுாரியில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவுடன்பணிநிரந்தரம் செய்யப்படுகிறார்கள். இதேபோல் மற்றவர்களும் தற்கொலைமிரட்டல் விடுத்தால் தான் பணி நிரந்தரம்செய்யப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

அப்போது என்.ஆர். காங்., எம்.எல்.ஏ., ரமேஷ் குறுக்கிட்டு, 'இப்படி பேசுவது தவறானது. மற்ற நிறுவனங்களை போல மருத்துவமனை கிடையாது. அங்கு கொரோனா நேரத்தில் ஊழியர்கள் எப்படி பணியாற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மற்றவர்களோடு, அவர்களை ஒப்பிடக்கூடாது. இந்த பணி நிரந்தரகோப்பு ஒன்னரை ஆண்டுகளாக தயாரித்து வழங்கப்பட்டது. தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பணிநிரந்தரம் வழங்கப்படவில்லை.

Latest Tamil News
கல்யாணசுந்தரம் தொடர்ந்து பேசும்போது, நான் அவர்களை தவறாக பேசவில்லை. பணிநிரந்தரம் ஏன் செய்தீர்கள் என கேட்கவில்லை. இவர்களைபோல கூட்டுறவு நிறுவனங்கள், சொசைட்டி கல்லுாரிகளில் பணி புரிபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தான் கூறினேன் என்றார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, 'எதையும் ஒப்பிட்டு பேச வேண்டாம். அனைத்து துறைகளிலும்பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டியவர்கள் உள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டியது நம் கடமை.

அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் பணியாற்றினர் என்ற அடிப்படையில் பணி நிரந்தரம் செய்துள்ளோம். பொதுப்பணித்துறையில் 1800 பேர் ஒரே நேரத்தில் பணிநிரந்தரம் செய்துள்ளோம். ரூ. 5 ஆயிரம் , ரூ. 6 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு பணி பாதுகாப்பின்றி வேலையில் உள்ளனர். துறையில் காலி பணியிடம் ஏற்படும் போது கவனத்தில் கொண்டு அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.10 ஆண்டிற்கு மேல் பணியில் உள்ளவர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவர். அந்தந்த துறைகளில் வாய்ப்பு ஏற்படும்போது நிரந்தரம் செய்வோம் என்றார்.


வாசகர் கருத்து (3)

  • அப்புசாமி -

    எப்பிடியாவது பத்து வருஷம் முதல்வரா இருந்திருங்கண்ணே. அப்புறம் நிரந்தர முதல்வராயிடலாம்.

  • raja - Cotonou,பெனின்

    கேசுக்கு முன்னூறு ருவா மானியம்... மாதம் ருவா 3000....இப்போ பணி நிரந்தரம் ..தலைவா கலக்கிடீங்க....இங்கேயும் விடியல் தரேன்னு சொல்லிகிட்டு ஒருத்தன் வந்தான் அவனைத்தான் தமிழர்கள் தேடுகிறார்கள்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்