ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி-கல்வராயன்மலை தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் மாரடைப்பில் இறந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வேளாக்குறிச்சியை சேர்ந்தவர் குணசேகரன்,59; தற்போது நீலமங்கலம் காமராஜர் நகரில் வசித்து வந்தார். இவர் கல்வராயன்மலை தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சரிதா என்ற மனைவியும், பாரதி,26; பாலாஜி,24; என்ற மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் குணசேகரனுக்கு நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடன் அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் இறந்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!