Load Image
Advertisement

பழனிசாமி மீது வழக்குப்பதிவு

Case registered against Palaniswami   பழனிசாமி மீது வழக்குப்பதிவு
ADVERTISEMENT
மதுரை: மதுரை விமான நிலையத்தில் நேற்று அமமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்திருந்தார். அப்போது மதுரை விமான நிலையத்திற்குள் அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

உடனடியாக அவரது பாதுகாவலர் ராஜேஸ்வரனின் செல்போனை பறிமுதல் செய்து விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.அப்போது அதிமுகவினர் சிலர் ராஜேஸ்வரனை தாக்கிய காட்சிகள் வெளியானது.
Latest Tamil News

இந்நிலையில் தன்னை தாக்கியதாக ராஜேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி உட்பட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


வாசகர் கருத்து (7)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    நீதிமன்றத்துக்கும், காவல்துறைக்கும் நேரத்தை வீணடிக்கும் கேஸ்களில் ஒன்று கூடுகிறது அவ்வளவுதான்

  • பேசும் தமிழன் -

    appo திமுகவினர் தாக்குதல் நடத்தினால் .....திமுக தலைவர் மீது வழக்கு பதிவு செய்வீர்களா ???

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    போட வேண்டியதற்கு வழக்கு கிடையாது - வெட்டியான வழக்குகளை தாராளமாக போடுவார்கள்...

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    இதனால் எந்தவித பயனும் இருக்கப்போவது இல்லை வேண்டுமானால் வழக்கு எண்ணிக்கையில் ஓன்று கூடும்,

  • Nicolethomson - Chikkanayakkanahalli, Bengaluru, Tumkur Dt,இந்தியா

    அவர் மீது எதுக்குங்க?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்