Load Image
Advertisement

டென்ஷன் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதுங்கள்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை


சென்னை: 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் டென்ஷன், பயம் இல்லாமல் பொதுத்தேர்வு எழுதுங்கள் என மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
Latest Tamil News

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை( மார்ச் 13) துவங்க உள்ளது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள் (மார்ச் 14) 11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. அதேபோல் சில தினங்களில் 10ம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தும், அறிவுரையும் வழங்கியுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது: 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் டென்ஷன், பயம் இல்லாமல் பொதுத்தேர்வு எழுதுங்கள். இது ஜஸ்ட் தேர்வு என்ற முறையில்தான் மாணவர்கள் உறுதியுடன் அணுக வேண்டும். எந்த கேள்வியாக இருந்தாலும் அது நீங்க படித்த புத்தகத்தில் இருந்துதான் வர போகுது. உறுதியோடு அப்ரோச் பண்ணுங்க. உங்களுக்கு தேவை தன்னம்பிக்கையும், மன உறுதியும் தான்.
Latest Tamil News
அது இருந்தாலே நீங்க பாதி ஜெவிச்சிட்டிங்க. தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பது அல்ல. உங்களை அடுத்த கட்டத்ததிற்கு எடுத்து செல்வது. அது உங்களுக்கு உயர்வை தரும். எந்த விதமான தயக்கமும் இன்றி மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளுங்கள். தேர்வை பார்த்து பயம் வேண்டாம். புத்தகத்தை புரிஞ்சு படிங்க. விடைகளை தெளிவாய் முழுமையாய் எழுதுங்க. நிச்சயமாக வெற்றி பெறுவீங்க..அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் போல் நானும் காத்திருக்கிறேன். முதல்வராக மட்டுமல்ல உங்களது குடும்பத்தில் ஒருத்தனாக வாழ்த்துக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


வாசகர் கருத்து (35)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    காசா,பணமா ??அறிவுரை தானே,இலவசமா எவ்வளவு வேணும்னாலும் எல்லாருக்கும் கொடுத்துக்கிட்டே இருப்பாரு ...

  • DVRR - Kolkata,இந்தியா

    அடுத்த இலக்கு நீட் போலவே இந்த பரிட்சையும் கூடாது என்று சட்டம் கொண்டு வருவோம் - இப்படிக்கு திருட்டு திராவிட மடியல் அரசு

  • Sankaran - chennai,இந்தியா

    அட..இதுல கூட மோடியை காபி அடக்கினுமா..அப்போ நாம் மோடியை பாராட்டிதான் ஆஹ வேண்டும்..

  • Asagh busagh - Munich,ஜெர்மனி

    உங்கள போல குறுக்கு புத்திய உபயோகித்து ஆட்டைய போடுற குடும்பம் இருந்தா யாருக்கும் ஸ்ட்ரெஸ் இருக்காது. பிள்ளைங்க பாவம் நேர்மையா தேர்வு எழுதனுமே. வேணும்னா ஆல்பாஸ்னு சட்டத்த போட்டு அவுங்க வாருங்கால முன்னேற்றதுல மண்ண அள்ளி போடுறுங்க.

  • V GOPALAN - chennai,இந்தியா

    Dear students those who are not passing exam we are here provide supply Biriyani, Bottle and rs 200 every month somehow or other don't break your head It was our DMK fellowmen wanted to convey

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்