ADVERTISEMENT
துாத்துக்குடி: ''தி.மு.க., ஆட்சி மீது கை வைத்தால், பா.ஜ.,வினர் உயிரோடு இருக்க மாட்டார்கள்,'' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன்கோவில் திடலில் நடந்த முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில், ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், 'ஆன்லைன் ரம்மி'யை எதிர்க்கின்றன. ஆகையால் தான், 'கவர்னர்களுக்கு வாய் இருக்கிறது; காது கேட்கவில்லை' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதற்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை, 'காது, வாய் முக்கியமில்லை. இதயம் தான் முக்கியம்' என, கூறியுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டால், 44 பேர் உயிரிழந்துள்ளனர். கவர்னருக்கு இதயத்துக்கு பதில் களிமண் இருக்கிறதா?

பலர், ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை தடுக்க சட்டம் இயற்றினால் அனுமதி தர கவர்னர் மறுக்கிறார்.
இதையெல்லாம் எடுத்துச் சொன்னால், தி.மு.க.,வை மிரட்டும் பாணியில் அண்ணாமலை போன்றோர் பேசுகின்றனர். தமிழக அரசியலை பா.ஜ., வேறு விதமாக நடத்தப் பார்க்கிறது.
தி.மு.க., ஆட்சியை ஏதாவது செய்யலாம் என்று பார்க்கின்றனர். தி.மு.க., ஆட்சி மீது கை வைத்தால், பா.ஜ.,வினர் உயிரோடு இருக்க மாட்டார்கள்.
மோடி யார் தலையில் கை வைத்தாலும், அவர்கள் கதை முடிந்து விடும். சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோரது தலையில் கை வைத்தார். இருவர் கதையும் முடிந்து விட்டது. பழனிசாமி தப்பித்து விட்டார்.
ஏப்., 14ல் தமிழக அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடப் போவதாக அண்ணாமலை கூறுகிறார். அப்படி வெளியிட்டால், மறுநாள் அண்ணாமலை காவல் துறையில் பணியாற்றிய போது புரிந்த ஊழல்களின் பட்டியலை நான் வெளியிடுவேன்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
வாசகர் கருத்து (60)
இந்த குப்பைத்தொட்டியை, முதலில் உலகிலிருந்து அப்புறப்படுத்தினால் தான் தமிழகம் சுத்தமாகும்.
இவனுக்கு வாய்க்கொழுப்பு ....நாக்கில் சனி
அடுத்த வருடம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி கிடைக்க தினமும் எதையாவது பேசும் நபர்களில் இவர் முதன்மையானவர்
எதோ வயதான மனிதர் மூப்பின் காரணமாக ஏதேதோ உளறுகிறாரோ என்று சென்றுவிடுங்கள் இவர் பேச்சை பொருட்படுத்தவே வேண்டாம் காதை மூடிக்கொள்ளுங்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
டெல்லியில் ஊதயநிதி மோடியின் முழங்காலில் விழுந்தபோதுகூட தலையில் கை வைத்ததாக கேள்விப்பட்டேன். நீங்கள் இவரையும் சேர்த்துதான் வசைபாடினீர்களா? அடைமொழி: சைத்தான் வேதம் ஓதுவது போல.