'ஹிந்தி தெரியாது போடா' என 'டி ஷர்ட்' போட்டவர்கள், 'பானி பூரி விற்பவர்கள்' என கேலி செய்தவர்கள், இப்போது ஹிந்தியிலேயே அறிக்கை விடும் நிலைக்கு வந்துவிட்டனர்.
இது குறித்து மத்திய அரசின் கேபினட் செயலர், தமிழக தலைமைச் செயலரிடம் பேசியதாக சொல்லப்படுகிறது.
'இந்த செய்திகள் வெறும் வதந்தி. வட மாநில தொழிலாளர்கள் நலமாக உள்ளனர். இவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது' என, ஹிந்தியில் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

மேலும், இதை பீஹார் அரசுக்கும் அனுப்பி, 'இந்த ஹிந்தி செய்தியை 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பீஹாரில் வெளியிடுங்கள்' என, கேட்டுக் கொண்ட தாம் தமிழக அரசு.
இந்த ஹிந்தி அறிக்கையை தயாரிக்க உதவியவர்கள் தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள். தமிழக கேடரில் உள்ள வட மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், இந்த அறிக்கையை தயாரித்தனராம். பீஹார் மக்களுக்கு இந்த செய்தி சென்று சேர்ந்தால்தான் பிரச்னை முடிவிற்கு வரும் என ஆலோசனை அளித்துள்ளனர், இந்த அதிகாரிகள்.
'ஆட்சிக்கு வர ஹிந்தியை எதிர்த்தாலும், ஆட்சி நீடிக்க ஹிந்தி தேவைப்படுகிறது' என, கிண்டல்அடிக்கின்றனர், புதுடில்லியில் உள்ள பா.ஜ., தலைவர்கள்.
வாசகர் கருத்து (10)
தமிழக அரசு பீகார் மாநில மக்களின் சந்தேகத்தை தீர்க்கும் விதமாக தன்னிலை அறிக்கை பீகார் மாநில பத்திரிகைகள் மூலமாக கொடுக்க வேண்டும் என்றால் ஹிந்தியில் தானே கொடுக்க முடியும்.இதையும் மொழி அரசியலாக்க பாஜகவினரால் மட்டுமே முடியும்!
பீடா வாயன், பானி பூரி விற்பவன் என்று மந்திரிகளே ஆறு மாஸம் முன்பு வரை துடுக்குப் பேச்சு பேசி வந்தனர். இதை சொன்னவுடன் நான் தமிழ் இன துரோகி ஆகி விடுவேன் !
தமிழகத்துக்குள்ளே ஹிந்தியை நுழையவிட மாட்டோம் என்றீர்கள் . மத்திய அரசு ஹிந்தியில் ஆவணங்களை அனுப்பக் கூடாது அரசு நிறுவனங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கக் கூடாது என்றீர்கள். இப்பொழுது நீங்களே அதே 🙃ஹிந்தியில் கெஞ்சும் நிலை. காலம் மாறிவிட்டது.
திராவிட கட்சிகள் அரசாங்க பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளும் இந்தியை படிக்க விடவேண்டும் இதனால் தமிழர்கள் எதிலாதில் இந்தி பேசும் மாற்ற மாநிலங்களில் வியாபாரம் செய்யவும் உயந்த பதவியில் பணியாற்ற முடியும், இந்தி படித்த ஆசிரியர்களுக்கு பள்ளியில் வேலைவாய்ப்பு கிடைக்கும், தங்கள் சுயநல அரசியலில் தமிழக மக்களை முட்டாள்கள் ஆக்க வேண்டாம். வாழ்க தமிழ் வளர்க பாரத ஒற்றுமை. ஜெய் ஹிந்த்
ஹிந்தியில் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது என்று சொல்வதைவிட பா.ஜ.பா. அரசு மோடி தலைமையில் நடக்கும் அரசு இந்த திராவிட மாடல் அரசை ஹிந்தியில் வெளியிட வைத்துவிட்டது என்றே சொல்லோ பெருமைப்படலாம். இனி என்ன வேண்டும் என்ன சாக்கு போக்கு காரணம் சொன்னாலும் எடுபடாது