Load Image
Advertisement

திவாலான சிலிக்கான் வேலி வங்கியை வாங்க தயார்: எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி!

Ready to buy bankrupt Silicon Valley Bank: Elon Musks next move!   திவாலான சிலிக்கான் வேலி வங்கியை வாங்க தயார்: எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி!
ADVERTISEMENT
திவாலான சிலிக்கான் வேலி வங்கியை வாங்க தயார் என டுவிட்டரை வாங்கிய பெரும் பணக்காரர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் 2008 நிதி நெருக்கடியின் போது வாஷிங்டன் மியூச்சுவல் எனும் வங்கி திவாலானது. அதன் பிறகு இன்று அந்த நிலையை எட்டியுள்ளது சிலிக்கான் வேலி வங்கி. 2008-க்கு பிறகு அமெரிக்க வங்கித் துறையில் நடக்கும் மிகப்பெரிய தோல்வி என இதனை நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்நிலையில் இந்த மூடப்பட்ட வங்கியை வாங்க தயார் என டுவிட்டரை வாங்கிய பெரும் பணக்காரர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கோவிட் ஊரடங்கு மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் போன்ற அடுத்தடுத்த பெரிய சம்பவங்களின் சங்கிலித் தொடர் விளைவால் விலைவாசி தாறுமாறாக உயர்ந்தது. இதனால் நம்மூர் ஆர்.பி.ஐ., போன்ற அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை படிப்படியாக உயர்த்த தொடங்கியது. இதனால் கடன் பத்திரங்கள் மதிப்பிழக்க தொடங்கின. பலரும் கடன் பத்திரங்களில் போட்ட முதலீட்டை அதிகளவு திரும்பப் பெற்றனர். அப்படி அதிக வாடிக்கையாளர்கள் கடன் பத்திர முதலீட்டை திரும்பப் பெற்றதால் சிலிக்கான் வேலி வங்கி திணறியது. இதனால் பங்குகளை விற்று நிதி திரட்டும் முடிவுக்கு வந்தது.
Latest Tamil News இதனை அறிந்த முதலீட்டாளர்கள் கடந்த வாரத்தில் முதலீட்டை விற்று வெளியேற தொடங்கினர். ஒரே நாளில் சிலிக்கான் வேலி வங்கிப் பங்குகள் 60% சரிந்தது. மார்ச் 10 அன்று அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டாளர்கள், வங்கியை மூடி, சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இவ்விவகாரம் உலகப் பங்குச்சந்தைகளை பாதித்துள்ளது.

சிலிக்கான் வேலி வங்கி ஸ்டார்ட் அப்களுக்கு நிதியளிப்பதில் முன்னணியில் இருந்தது. இந்திய ஸ்டார்ட் அப்கள் பலவும் இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளன.சொத்துக்கள் அடிப்படையில் இது அமெரிக்காவின் 16வது பெரிய வங்கி. 2022 டிசம்பர் நிலவரப்படி, இந்நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பு 17 லட்சம் கோடி ரூபாய். வைப்புத்தொகையின் மதிப்பு மட்டும் தோராயமாக 14 லட்சம் கோடி ரூபாய்.
Latest Tamil News இந்நிலையில் கடந்த ஆண்டு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய்க்கு டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்கிடம், ரேசர் எனும் கேமிங் சாதனங்கள் நிறுவனத்தின் சி.இ.ஓ., மின் லியாங் தன் சிலிக்கான் வேலி வங்கி குறித்து, கேள்வி எழுப்பியிருந்தார். அது என்னவெனில், “டுவிட்டர் நிறுவனம், சிலிக்கான் வேலி வங்கியை வாங்கி டிஜிட்டல் வங்கியாக மாற்றுமா” என்பது தான் அது. அதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், அது பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்