Load Image
Advertisement

திமுக.,வை போல் தோற்றதும், வென்றதும் யாருமில்லை: ஸ்டாலின்

MKstalin about dmk victory in elections திமுக.,வை போல் தோற்றதும், வென்றதும் யாருமில்லை: ஸ்டாலின்
ADVERTISEMENT
கோவை: அரசியல் வரலாற்றில் அதிகம் வென்றதும். அதிகம் தோற்றதும் நாங்கள் தான். வேறு யாருக்கும் அந்த பெருமை கிடையாது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கோவையில் நடந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க., அ.ம.மு.க., ம.நீ.ம., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.

இந்த விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., பல போராட்டங்கள், நெருக்கடிகளை சந்தித்துள்ளது. அவசரநிலை பிரகடனப்படுத்திய போது, டில்லியில் இருந்து கருணாநிதிக்கு தூது வந்தது.
ஆனால், அதனை கண்டு கொள்ளாமல் அவசரநிலையை எதிர்த்தும், பிரதமராக இருந்த இந்திராவை எதிர்த்தும் கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றினார். மறுநாள் ஆட்சி கலைக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட எங்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்தன.

Latest Tamil News
அதற்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோற்றது. 13 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியவில்லை. பிறகு 89ல் ஆட்சிக்கு வந்தோம். 2011க்கு பிறகு 10 ஆண்டுகள் தி.மு.க., ஆட்சியில் இல்லை. தற்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம். தி.மு.க.,வை போல், அதிக வெற்றியையும், தோல்வியையும் பார்த்த கட்சிகள் யாரும் கிடையாது.

தி.மு.க.,வுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க, மக்கள் வைத்த மிகப்பெரிய நம்பிக்கையே காரணம். அரசின் திட்டங்கள், சாதனைகள் தொடர லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அதற்கு இன்றைக்கே களமிறங்க வேண்டும்.

இன்றைக்கு மதம், ஜாதியை பயன்படுத்தி கலவரம், குழப்பத்தை ஏற்படுத்தலாம், அதன் மூலம் ஆட்சியை கலைத்துவிடலாம் என்ற கனவோடு சிலர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதனை பற்றி கவலைப்படாமல், தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.

கடந்த தேர்தலில் ஒரு தொகுதியை இழந்தோம். இந்த முறை, புதுச்சேரியையும் சேர்த்து 40 இடங்களிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெறும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

அடுத்த முதல்வர் நான் தான் எனக்கூறி திடீரென கட்சி துவங்கியவர்கள் இன்று அனாதையாக உள்ளனர். தேர்தலில் போட்டியிட அல்ல. மக்கள் பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் தி.மு.க., இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


வாசகர் கருத்து (40)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    ஒரு இடைத் தேர்தலில், 50 கோடி ரூபாயை செலவு செய்து, ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் களத்தில் இறக்கி வெற்றி பெறுவது பெருமையா? இவ்வளவு செய்ய முடிந்தால், பத்து உறுப்பினர் கொண்ட மக்கள் நீதி மய்யம் கூட வெற்றி பெறமுடியும்.

  • ranjani - san diego,யூ.எஸ்.ஏ

    உன்னை ஏன் சிறையில் அடைத்தார்கள் என்ற உண்மையான காரணத்தை உன்னால் கூறமுடியுமா? உன் கால் நரம்பு சிதைபட்ட காரணமும் இதில் அடங்கும். பொய் மேல் பொய் பேசாதே.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    தி.மு.க வினரைப் போல் அரசாங்க கஜானாவைக் காலி செய்தது வேறு யாரும் இல்லை ....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    தி.மு.க விற்கு இந்தியாவில் குறுக்கு வழியில் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்ததற்கான வாழ் நாள் சாதனை விருதைக் கூடக் கொடுக்கலாம்,கொஞ்சம் கூடத் தவறில்லை....

  • B N VISWANATHAN - chennai,இந்தியா

    மறுபடியும் தோல்வி அடையாமல் இருக்கனும் என்ற எண்ணம் இருந்தால் ஒழுங்கா ஆட்சி செய்யணும். இல்லன்னா கலைஞர பேர் சொல்லி இனிமே ஓட்டு வாங்க முடியாது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement