ADVERTISEMENT
புதுடில்லி: தலைநகர் டில்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவரை மானபங்கபடுத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய டில்லியில் உள்ள பஹர்கன்ஜ் பகுதியில் தங்கியிருந்த அந்த பெண்ணை, ஹோலி கொண்டாட்டத்தின் போது, சிலர் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்ததுடன், கலர்பொடிகளை தூவியும், தலையில் முட்டையை உடைத்தும் தாக்கினர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதேநேரத்தில், இது குறித்து அந்த பெண் போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை.
சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவை தொடர்ந்து, 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (3)
என்கவுண்டர் செய்யவேண்டும் இப்படிப்பட்ட அவமானம் செய்பவர்களை முக்கியமாக டெல்லியில் இது போன்ற நிகழ்வுகள் அதிகம் நடக்க காரணம் சரியான தண்டனை கிடைப்பதில்லை இந்த குற்றவாளி களுக்கு டில்லி லுட்டியண் ஏரியா வக்கீல்கள் இப்படிப்பட்ட குறாறவாளிகளுக்கு உடந்தையாக இருந்து பணம் சம்பாதிக்கின்றனர்.
காட்டுமிராண்டிகள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கெஜ்ரிவால் ஆட்சி, தமிழ்நாட்டிற்கு போட்டியாக முன்னேற்றம் (அவலம் )