கொரோனா பரவல் காலத்தில், நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, அரசு ஊழியர்களின் ஓய்வு வயது, 58ல் இருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டது. அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஓய்வு வயது உயர்ந்தது.

இதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு பழையபடியே, 58 வயதுடன் ஓய்வளிக்க அரசு ஆலோசித்து வருகிறது. அவ்வாறு ஓய்வு அளித்தால், அவர்களுக்கான பணப் பலன்களை வழங்க, 1,400 கோடி ரூபாய்க்கு மேல் தேவை. அதற்கான ஒப்புதலை நிதித்துறையிடம், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கோரி உள்ளனர். ஒப்புதல் கிடைத்ததும், ஓரிரு மாதங்களில், ஓய்வு பெறும் வயதைக் குறைக்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
வாசகர் கருத்து (21)
தலைக்கு விக்கு வெச்சு,மேக் அப் போட்டுக்கிட்டு ஊரை ஏமாத்தலாமா...???
தேர்தலில் போட்டி இட வயது உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் .அம்பது வயதுக்கு மேல் தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்.
இதுபோல் வயது குறைப்பு, அமைச்சர்களுக்கும், MLA -க்களுக்கும், MP -க்களுக்கும் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகளின் பணி மூப்பின் வயதையும் அம்பத்தி எட்டு அல்லது அறுபது என்றும் வரையறை நிர்ணயிக்கலாம் .அவர்களின் சம்பளத்தையும் ,சலுகைகளையும் ,ஓய்வு பெற்றால் தரப்படும் பென்ஷன் இவை எல்லாம் மக்களின் வரிப் பணத்தில் இருந்து தரப்படுவதால் அவற்றையும் வெகுவாகக் குறைக்கலாம் .வயது அதிகமாக அதிகமாக முதுமை அடைவதால் அவர்களால் செம்மையாகப் பணியாற்ற முடியாது .அவர்களையும் முதுமையைக் காரணம் காட்டி வீட்டுக்கு அனுப்பிவிடலாம் அரசாங்கத்தின் செலவும் பெருமளவில் மிச்சமாகும் .
திமுக என்றாலே பொய் மற்றும் பித்தலாட்டம் தான்