ஆய்வு
இஸ்ரோவின் கீழ் இயங்கும், 'நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர்' எனப்படும், தேசிய தொலைஉணர்வு மையம் சார்பில், நம் நாட்டில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிறைந்த பகுதிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், நம் நாட்டில் உள்ள 147 மாவட்டங்கள் நிலச்சரிவு அபாயம் நிறைந்த பகுதி என கண்டறியப்பட்டுள்ளது.

இதில், உத்தரகண்ட்டில் உள்ள ருத்ரபிரயாக், தெஹ்ரி ஆகிய மாவட்டங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
இந்த பட்டியலில், உத்தரகண்டின் 13 மாவட்டங்கள், நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிறைந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இணைய தளம்
சமீபத்தில் நிலச்சரிவுக்கு உள்ளான ஜோஷிமத் நகரம் அமைந்துள்ள சமோலி மாவட்டம், 19வது இடத்தை பிடித்து உள்ளது.நிலச்சரிவு அபாயம் மிகுந்த மாவட்டங்களின் பட்டியலில், தமிழகத்தின் கோவை மாவட்டம், 36வது இடத்திலும், திண்டுக்கல் மாவட்டம், 41வது இடத்திலும் உள்ளன.
மேலும் இப்பட்டியலில் கன்னியாகுமரி, 43வது இடத்திலும், தேனி மாவட்டம், 59வது இடத்திலும் உள்ளன. 72வது இடத்தில் திருநெல்வேலியும், 85வது இடத்தில் நீலகிரியும் இடம்பிடித்துள்ளன.
இதுகுறித்து கூடுதல் தகவல்களை விரிவாக காண, https://www.nrsc.gov.in/ என்ற இணைய தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து (4)
'நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர்' எனப்படும், தேசிய தொலைஉணர்வு மையம்...கனிம வளங்களை கண்டுபிடிக்காம பீதி கிளப்புகிறதே ..
மலை சார்ந்த இடங்களில் நிகழ்வது நிலச்சரிவு.. இதெல்லாம் ஏன்னா மாதிரியான ஆய்வு முடிவுகளோ?
நீலகிரி மாவட்டத்தில் முறைகேடாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களும், அந்நிய தேச மரங்களான யுகாலிப்டஸ், சவுக்கு, பைன் போன்ற வேறு சில மரம் செடிகளும், பேராசையால் விவசாய நிலங்கள் தேயிலைத்தோட்டங்களாக மாற்றப்பட்டதும் மலைப்பகுதியில் நிலத்தின் உறுதி தன்மையை வெகுவாக பாதித்திருப்பது வெளிப்படையான உண்மை, கான்க்ரீட் கட்டிடங்கள் வரம்பு மீறி கட்டப்பட்டுள்ளன, இன்னும் கட்டப்பட்டு வருகின்றன, அனுமதியில்லை என்று கூறினாலும் நாள் முழுக்க கட்டட உபகரணங்கள் பொருட்கள் பெரிய வாகனங்களில் கொண்டுபோவதை கண்கூடாக பார்க்க முடிகிறது, அகா மொத்தம் மலைப்பகுதிகள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது உண்மையே. கண்டுகொள்ள யாரும் இல்லை.