Load Image
Advertisement

காலிஸ்தான் ஆதரவு யூடியூப் சானல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

Pro-Khalistan YouTube Channels Blocked: Central Govt   காலிஸ்தான் ஆதரவு யூடியூப் சானல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி
ADVERTISEMENT
புதுடில்லி: காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக இயங்கி வந்த சமூக வலைதளமான 6 யூடியூப் சானல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.


பஞ்சாபை பிரித்து தனிநாடாக அறிவிக்க, பல ஆண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டம் நடத்திய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு வெளிநாடுகளிலிருந்து செயல்பட்டு வருகிறது.
Latest Tamil News
பஞ்சாபில் கடந்த பிப்.23-ல் 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்ததை கண்டித்து அந்த அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் தலைமையில் ஆயிரக்கணக்கானோர், கத்தி, வாளுடன் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் காலிஸ்தான் ஆதரவு கொள்கை, கோட்பாடுகளை 6 யூடியூப் சானல்கள் ஒளிபரப்பி வந்துள்ளது மத்திய அரசின் கவனத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த சானல்கள் முடக்கி வைக்கப்பட்டதாக மத்திய தகவல் ஒளிரப்பத்துறை செயலர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (3)

  • sankar - Nellai,இந்தியா

    மீண்டும் ஒரு ஆபரேஷன் புளு ஸ்டார் தேவை

  • Sivabalan - coimbatore,இந்தியா

    அப்படியே பாஜகவின் IT விங்கையும் முடக்கவேண்டும். பழைய செய்திகளையும் படங்களையும் வைத்து பொய் செய்திகளை வெளியிடும் நெம்பர் ஒன இந்த பாஜக விங்.

  • Nachiar - toronto,கனடா

    சபாஷ் இது ஆரம்பம். முழு மூச்சாக நாட்டை பிரிக்கும் எல்லா சக்திகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்து சாம்பலாக்க வேண்டும். புலம் பெயர்ந்த நாடுகளிலும் தேர்தல்கல் வரும். தாயகத்திற்கு எதிரான பிரிவினை வாதம் பேசும் எந்த ஒரு கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் என புலம் பெயர்ந்த இந்துக்கள் ஒரு மனதாக வாக்களித்தால் எங்களது வாக்கு வங்கியின் பலமும் தெரியத் தொடங்கும் . வாழ்க பாரத்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்