ADVERTISEMENT
பெய்ஜிங்: சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தொடர்ந்து 3வது முறையாக அந்நாட்டு பார்லிமென்டில் அதிபராக பதவியேற்றார்.
சீன அதிபர் அந்நாட்டின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு செய்யப்படுவார். அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். கட்சி அவரை ஒருமனதாக தேர்வு செய்தது. மேலும், மத்திய ராணுவ கமிஷன் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டின் பார்லிமென்டான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங்கை முறைப்படி அதிபராக தேர்வு செய்தது.

இதையடுத்து, அவர் அந்நாட்டு பார்லிமென்டில் சீன அதிபராக உறுதிமொழி ஏற்றார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மவோவுக்குப் பிறகு 2 முறைக்கு மேல் சீன அதிபராகி இருக்கும் முதல் நபர் ஜி ஜின்பிங். இவர் தனது வாழ்நாள் முழுவதும் அந்நாட்டின் அதிபராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த அக்டோபரில் கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங் தேர்வாகி இருந்தார்.
வாசகர் கருத்து (8)
ஒப்பந்தத்தில் வாழ்த்து சொள்ளனுமுண்ணு போடலையா பப்புவே......
புலி மேல் சவாரி. பதவியை விட்டால் உயிருக்கே ஆபத்து.
இந்தியாவில் மக்கள் ஒட்டு என்னும் ஜனநாயக உரிமையை தேர்தலில் பயன்படும் வரை அவர்களுக்கு பிடித்தவர்களை தான் பிரதமராக தேர்வு செய்வர், திராவிட ஆதரவு நபர்களின் விருப்பு வெறுப்பு எல்லாம் தமிழ்நாட்டில் வேண்டுமானால் பேசிக்கொள்ளலாம்,
அவர் ஏற்படுத்திய பிரச்சனைகளை அவரே தீர்த்து வைக்கட்டும் என்பதால் இருக்கும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஜனநாயகத்தை பற்றி ஊருக்கு உபதேசம் செய்யும் உண்டியல் நாதாரிகளே வாங்க வந்து நீங்களே காரி துப்பிட்டு போங்க... தி மு க கட்சியின் முதலாளியாக கருணாநிதி குடும்பம் கான் கிரேஸ் கட்சிக்கு திருட்டு காந்தி குடும்பம் லாலு கட்சிக்கு அந்த கொள்ளை காரன் குடும்பம் சரத் பவார் கட்சிக்கு அவன் குடும்பம் முதலாளியாக இருப்பது போல உண்டியல் பசங்களுக்கு இவன் முதலாளி