Load Image
Advertisement

வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கு: லாலு மகன், மகள் வீடுகளில் ரெய்டு

Case of bribery of land for work: Action raid in Bihar, Delhi   வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கு: லாலு மகன், மகள் வீடுகளில் ரெய்டு
ADVERTISEMENT
புதுடில்லி: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கு தொடர்பாக பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி, அவரது சகோதரி உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ரயில்வேயில் வேலை தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்ற மோசடி செய்ததாக பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது பிள்ளைகள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Latest Tamil News
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பீஹார் மற்றும் டில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லியில் உள்ள பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சகோதரி ராகினி யாதவ், சந்தா யாதவ் மற்றும் ஹேமா யாதவ், ஆர்ஜேடி முன்னாள் எம்எல்ஏ சையத் அபு டோஜ்னாவுக்கு சொந்தமான இடங்கள் என டில்லி, ராஞ்சி, என்சிஆர் மற்றும் மும்பை என 15 இடங்களில் சோதனை நடந்தது.


வாசகர் கருத்து (4)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவிற்கு தேஜஸ்வி யாதவ் வராமல் தவிர்த்திருந்தால் இந்த ரெய்டு நடந்திருக்காது. ஏற்கனவே சாட்சிகள் சரியில்லையென்று தள்ளுபடி செய்யப்பபட்ட வழக்கு..

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இந்த வழக்கு போடப்பட்டு பல வருடங்கள் ஓடிவிட்டது. ஆனால் இன்றுவரை இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரவில்லை. வரவும் வராது. இப்பகூட பாருங்க மீண்டும் ரெய்டு. என்றோ பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு ஊழலில், சாரி, ஊழல் என்று நிரூபிக்கப்படவில்லையாம், ஆகையால், என்றோ பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் ரெய்டு செய்தால் என்ன சாட்சியம் கிடைக்கும். எல்லாம் அழிக்கப்பட்டிருக்கும். ஆக இந்த ரெய்டு தேவைதானா...?

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    மனிஷ் சிசோடியா மாதிரி அடுத்து திஹாருக்கு செல்லவேண்டியவர்.

  • மோகனசுந்தரம் -

    தும்பை விட்டு வால் பிடித்த கதையாக எப்பவோ நடந்த விஷயத்திற்கு இப்பொழுது ரெய்டு நடத்துவது எந்த விதத்தில் அனுகூலமாக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement