Load Image
Advertisement

அரசு ரூ.346 கோடி பாக்கி: தனியார் பள்ளிகள் அதிருப்தி

Govt owes Rs 346 crore: Private schools unhappy   அரசு ரூ.346 கோடி பாக்கி: தனியார் பள்ளிகள் அதிருப்தி
ADVERTISEMENT
சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச சேர்க்கைக்காக, பள்ளிகளுக்கு, தமிழக அரசு வழங்க வேண்டிய கட்டணம், 364 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாக, தனியார் பள்ளிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் நுழைவு வகுப்பான, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், மாணவர்கள் கட்டணமின்றி சேர்க்கப்படுகின்றனர்.

இந்த திட்டத்தில், நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், ஆண்டுக்கு, 70 ஆயிரம் முதல், 80 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த மாணவர்களுக்கு, 8ம் வகுப்பு வரை படிப்பதற்கான கல்வி கட்டணத்தை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, தமிழக அரசே வழங்குகிறது.
Latest Tamil News
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியில், முதற்கட்டமாக, 364 கோடி ரூபாய் வழங்க, பள்ளிக்கல்வி துறை ஒப்புதல் அளித்திருந்தது.

ஆனாலும், இந்த நிதி பள்ளிகளின் வங்கி கணக்குக்கு வந்து சேரவில்லை என, தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

எனவே, ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனரக அதிகாரிகள், தனியார் பள்ளிகளுக்கான நிதியை விரைந்து வழங்க, பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (12)

  • sankar - chennai,இந்தியா

    நானே வாங்கின கடனை அடைக்கமுடியாமல் விழி பிதுங்கி போச்சு இன்னமும் என்கிட்டே போய் காசு தா கேக்கிறேயே தந்தை பெரியாரே காப்பாற்றுங்கள்

  • குரு -

    மருத்துவ கல்லூரிகளில் அரசாங்க இட ஒதுக்கீடுகள் நிறப்பபடும் போது அரசாங்கம் வகித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த முறையில் பார்த்தால் மத்திய அரசு kV palli கட்டனமான வருடத்திற்கு 6000 மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் அது இங்கே நடக்கிறதா என்றால் இல்லை. திராவிட மாடல்

  • குரு -

    எவோனோ நடத்தும் பள்ளிக்கு யார் பணம் தருவது. யார் பயனாளிகள் list இல்லை. பள்ளியில் வேலை செய்யும் வாகன ஓட்டுநர் வேண்டியவர்கள் அனுமதி பெற்று தந்தவர்கள் ஆகியோருக்கு seat வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் KV போன்ற தரமான கல்வி வழங்காது. ஆனால் இதன் மூலம் கொள்ளை அடிப்பார்கள்

  • ஆரூர் ரங் -

    மாணவர்களே அவ்வளவாக சேராமல் இருந்த கொள்ளை வசூல் தனியார் பள்ளிகளை வளர்க்கத்தான் இந்த கல்வி🙃 உரிமை சட்டமே இயற்றப்பட்டது. இப்போது அரசிடமிருந்து பணம் வரவில்லை என நாடகம் ஆடுவது சிரிப்பை வரவழைக்கிறது. இந்தப் பள்ளிகளுக்கு தெண்டமாக அழும் வரிப்பணத்தில் அரசு தரமான பள்ளிகளை உருவாக்கி விடலாம்

  • raja - Cotonou,பெனின்

    தமிழன் படித்து விட்டான் என்றால் திராவிடன நம்ப மாட்டான் என்ற பயம் தான் இந்த விடியாத ஆட்சியில்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்