Load Image
Advertisement

லென்ஸ்கார்ட்டில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது அபுதாபி முதலீட்டு ஆணையம்!

Abu Dhabi Investment Authority invests Rs 4 thousand crore in Lenskart!   லென்ஸ்கார்ட்டில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது அபுதாபி முதலீட்டு ஆணையம்!
ADVERTISEMENT
ஆன்லைன் கண் கண்ணாடியக நிறுவனமான லென்ஸ்கார்ட்டின் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை அபுதாபி முதலீட்டு ஆணையம் வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் இறுதி கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்களின் கண் பிரச்னைகளுக்கு கண்ணாடி அணிய வேண்டிய தேவை உள்ளது. நாட்டில் தினசரி 15 லட்சம் கண்ணாடிகள் விற்பனையாகின்றன. இந்த சந்தையின் தேவையை அந்தந்த பகுதி ஆப்டிகல்கள் பூர்த்தி செய்தன. டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆன்லைன் கண்ணாடியகமாக்கினால் எளிதில் பலரை சென்றடையலாமே என்ற எண்ணம் 2010ல் பியூஷ் பன்சாலுக்கு தோன்றியது. ஐ.ஐ.எம்., பெங்களூருவில் எம்.பி.ஏ., முடித்த அவர், அமித் மற்றும் சுமித் என்பவருடன் இணைந்து எண்ணத்திற்கு செயல் வடிவம் தந்த போது லென்ஸ்கார்ட் ஸ்டார்ட்அப் உருவாகியது.
Latest Tamil News இந்நிறுவனத்தில் ரத்தன் டாடா, சாப்ட்பேங்க், டிபிஜி கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ஆன்லைனில் தங்கள் தொழிலை நிலை நிறுத்தியதும், தற்போது சாதாரண கடைகளையும் நாடு முழுவதும் திறந்துள்ளனர். தற்போது வரை சுமார் 30 நகரங்களில் 500 கடைகளுக்கு மேல் உள்ளன. தங்களது ஆப்டிகல் உற்பத்தி மையம் மூலம் தினசரி பல லட்சம் லென்ஸ்களை உற்பத்தி செய்கின்றனர். இவர்களிடம் 5000 வகையான கண்ணாடி ப்ரேம்கள், 45 வகையான லென்ஸ்கள் கிடைக்கின்றன.

தற்போது தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலும், மூலதனத்தை திரட்ட போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பை ரூ.32 ஆயிரம் கோடி என அபுதாபி முதலீட்டு ஆணையம் மதிப்பிட்டுள்ளது. அந்த மதிப்பீட்டில் லென்ஸ்கார்ட்டின் பங்குகளை ரூ.4 ஆயிரம் கோடிக்கு அபுதாபி முதலீட்டு ஆணையம் வாங்க உள்ளது. சொர்ப்பமான ஸ்டார்ட்அப்களே லாபமீட்டுவதாக உள்ளன. அதில் லென்ஸ்கார்ட்டும் ஒன்று. 2024ல் இந்நிறுவனம் பங்குச்சந்தைக்கு வர திட்டமிட்டுள்ளது.


வாசகர் கருத்து (2)

  • rama adhavan - chennai,இந்தியா

    Better TASMAC, a TN State Undertaking (TN State Marketing Corporation) go as a partly owned govt. Co and 49% of its shares to private by auction.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இதைவிட அதிக வருமானம் தமிழகத்தின் டாஸ்மாக் சரக்கு கடைகளில். அங்கு முதலீடு செய்தால் மேலும் அதிக வருமானம் ஈட்டலாம் என்று அந்த அபுதாபி முதலீட்டு ஆணையத்துக்கு யாராவது சொல்லுங்கப்பா...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement