Load Image
Advertisement

அமித்ஷா கான்வாயை பின்தொடர்ந்த காரால் பரபரப்பு

Security Breach During Amit Shah Tripura Visit, Car Sped Past Cops அமித்ஷா கான்வாயை பின்தொடர்ந்த காரால் பரபரப்பு
ADVERTISEMENT
அகர்தலா: திரிபுராவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கான்வாயை பின் தொடர்ந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திரிபுரா சென்றுள்ளார். அகர்தலாவில் உள்ள விருந்தினர் மாளிகையில் திப்ரா மோதா கட்சி தலைவர் பிரத்யோத் மாணிக்யா தேபுர்மாவை சந்தித்து பேசினார். இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது முதல்வர் மாணிக் சஹாவும் உடன் இருந்தார்.

Latest Tamil News
சந்திப்பு முடிந்ததும், விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் அமித்ஷா கிளம்பினார். சில முக்கிய பிரமுகர்களின் காரும், அமித்ஷா கான்வாயை பின்தொடர்ந்தது வெள்ளை கார் ஒன்றும் பின்தொடர்ந்து வந்தது. அந்த காரில் நம்பர் பிளேட் இல்லை. அதனை கண்டுபிடித்த போலீசார் தடுத்து நிறுத்தி, காரை ஓட்டி வந்த மர்ம நபரை பிடிக்க போலீசார் முயற்சி செய்தனர். போலீசாரை பார்த்ததும், அந்த மர்ம நபர் அங்கிருந்து, காரை வேகமாக ஓட்டி னெ்றார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து (2)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    போலீசுக்கே 'ஹல்வா' கொடுத்த அந்த மர்மநபர் யார்? சீக்கிரம் அவன் பிடிபடவேண்டும். உண்மை வெளிவரவேண்டும்.

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    அந்த நேரத்தில் கையில் துப்பாக்கி இல்லாத போலீசார் எதற்கும் பயனில்லை துப்பாக்கி இருந்திருந்தால் அந்த காரின் டயரை நோக்கி சுட்டுருந்தால் அந்த மர்ம நபர் பிடிபட்டிருப்பார் இதுதான் பொலிஸாரின் லாப்சஸ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement