
இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க கோரி ஏற்கனவே தமிழக அரசு அனுப்பியது. இதனை கவர்னர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து , இரண்டாம் முறையாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா கடந்தாண்டு அக்டோபர் 19-ம் தேதி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 4 மாதங்கள் 11 நாட்கள் கழித்து மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து அண்ணாமலை கூறியதாவது: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டத்தை கவர்னர் திருப்பி அனுப்பிய காரணத்தை வெளியிடுங்கள் .காரணத்தை வெளியிட்ட பின் மக்களே முடிவு செய்யட்டும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
வாசகர் கருத்து (11)
முன்னர் திமுகவால் கொண்டு வரப்பட்ட குதிரைப் பந்தய ஒழிப்பு சட்டத்தை ஸ்டாலின் மீண்டும் கொண்டுவரலாமே? அப்போது நாட்டிலேயே அதிக பந்தயக் குதிரைகளை வைத்திருந்த MAM விடம் திமுக தேர்தல் நிதி வாங்கியதை ஆற்காட்டார் ஒரு😇 பேட்டியில் குறிப்பிட்டார்.
என்ன திருத்தங்கள் செய்யவேண்டும் என்று ஏன் கவர்னர் மாளிகை தெரிவிக்கவில்லை? இந்த கவர்னர் சூதாட்ட முதலாளிகளை ஏன் சந்தித்தார் என்று எந்த அறிக்கையும் இது வரைக்கும் விடவில்லை?
குதிரை பந்தயம், lottery, சீட்டு ஆட்டம்.. மாநில எல்லைக்குள் நடக்கும். அதனை தடை செய்ய முடியும். Online சூதாட்டம் மாநிலம் விட்டு வெளியில் நடப்பதால், எப்படி தமிழக நிர்வாகம் தடை செய்ய முடியும்? எந்த சட்டம் (revenue act, police act...) கொண்டு யார் நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர்? தமிழக நிர்வாகம் டாஸ்மாக் தடை செய்ய முடியும். காற்றில் மிதக்கும் online app தடை செய்ய மாநில அளவில் அதிகாரம் இருக்காது. மத்திய அரசு தான் சட்டம் வகுக்க முடியும்? அனைத்து மாநிலங்கள் ஒன்று சேர்ந்து உதவலாம்.
ஒரு சூரியன்(ரவி) இன்னொரு(உதய) சூரியனை சுட்டெரிக்கிறது👌☺️☺️
இது உண்மையான காரணம் என்றால் சட்டமசோதாவை அனுப்பிய முதல் நாளே சொல்லியிருப்பார். இப்போ மேலே கோடிக்கணக்கில் கமிசன் கொடுத்தவனுக்காக ரூம் போட்டு யோசிச்சு டெய்லி ஒண்ணு உருட்ட வேண்டியுஇருக்கு.