புதுடில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொழிலதிபர்கள் குழுவுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழுவினர், ரூ100 கோடி வரை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும், அதனை ஆம் ஆத்மியினர் பெற்று கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது இந்த குழுவில், முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், எம்எல்சி.,யுமான கவிதா இருப்பதும் தெரியவந்ததை தொடர்ந்து, விசாரணை அமைப்புகளின் பார்வை அவர்கள் மீது திரும்பியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கவிதா தொடர்புடைய வீடுகளில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அவரின் மாஜி ஆடிட்டர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாளை (மார்ச் 09) நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாசகர் கருத்து (6)
எல்லா வாரிசுகளும் ஆண் பெண் பேதமின்றி ஊழல் பிண நாற்றத்தில் ஊறி திளைக்கிறார்களே?
இது முழுக்க பி ஜெ பி யின் பழிவாங்கும் நாடகம்
ஹாட் கவிதாவுக்கு ஒண்ணுமே ஆகாது .... டோன்ட் ஒர்ரி .... பிஜேபி தேர்தல் நிதி திரட்டுறதுல இதுவும் ஒரு வழி ... அம்புட்டுதேன் ....
ED விசாரணை எல்லாம் ஜுஜுபி. ராவுல் சோனியா வை கூடதான் விசாரிச்சாங்க, என்ன ஆச்சு? CBI கேஸ் போட்டு அரெஸ்ட் பண்ணனும். ஒருதலை பட்சமா எதிர்க்கட்சி தலைவர்களையே குறிவைத்து BJP அரசு இயந்திரங்களை பயன்படுத்துகிறது என்று அவர்கள் கதறினாலும், அட்லீஸ்ட் அந்த அளவுக்காவது குற்றவாளிகள் தண்டனை பெரும் வாய்ப்பு கிடைக்கிறதே என்று பொதுமக்களாகிய நாம் சந்தோசப்படவேண்டும். மாட்டிக்கொண்ட அவர்களுக்கு வேண்டுமானால் பக்கத்துக்கு பையனுக்கு தண்டனை கொடுக்கலையே என்று அழலாம். அதற்க்கு வேண்டி எல்லா குற்றவாளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்குகிறமாதிரி நடவடிக்கையே எடுக்காமல் விட்டால் நாடு என்னவாகும், மக்களின் செல்வங்கள் முழுவதுமாக சூறையாடப்படும். அதனால், எவ்வளவு கதறினாலும், கதற கதற கைது செய்து உள்ளே அடைக்கவேண்டியதுதான். UP மாநிலத்தில் ரௌடிகளின் வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதை பார்த்து ஆயிரத்தில் ஒரு ரவுடி பயந்து மீண்டும் குற்றங்கள் செய்யாமல் தவிர்த்தால்கூட, அந்த அளவுக்கு சமுதாயம் சீராகும் அல்லவா? அதுபோல், அரசியல்வாதிகள் 99 % ஊழல் பேர்வழிகளாக இருந்தாலும், எல்லோரையும் பிடித்து உள்ளே போடுவது சாத்தியமில்லாத ஒன்று. ஆகவே, ஒரு குற்றவாளி சிறை பிடிக்கப்பட்டாலும் பொதுமக்கள் வரவேற்று சந்தோஷப்பட்டால், நாளை நிறைய குற்றவாளிகள் பிடிபடுவதற்கு அரசு ஆவண செய்யலாம்.
உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று சிறையில் சிசோடியாவும் கவிதாவும் அவர்கள் செய்த ஊழலுக்காக தோப்புக்கரணம் போட வேண்டியிருக்கும்