Load Image
Advertisement

பிரசாந்த் கிஷோர் -மிரட்டல் தி.மு.க.,வுக்கு நெருக்கடி

Prashant Kishor - Intimidation is a crisis for DMK   பிரசாந்த் கிஷோர் -மிரட்டல் தி.மு.க.,வுக்கு நெருக்கடி
ADVERTISEMENT
சென்னை : கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு தேர்தல் பணியாற்றிய, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், வட மாநில தொழிலாளர்கள் பிரச்னையை கையிலெடுத்து, பீஹார் அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.ரயிலில் வட மாநில தொழிலாளர் ஒருவர் தாக்கப்படும் 'வீடியோ'வை, தமிழக ரயில்வே காவல் துறை, பிப்ரவரி 16-ம் தேதி வெளியிட்டது. இதை தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்த பிரசாந்த் கிஷோர், 'இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை, பீஹார் அரசு கேட்க வேண்டும்' என
கோரியுள்ளார்.
Latest Tamil News

இப்பிரச்னை தொடர்பாக பேட்டியளித்த அவர், 'வட மாநில தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக பலர், பொய்யான வீடியோக்களை பகிர்ந்தது உண்மை தான். 'ஆனால், அதற்காகவே, தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பிரச்னை இல்லை என்று சொல்ல முடியாது. விரைவில் உண்மையான வீடியோக்களை வெளியிடுவேன்' எனக் கூறியுள்ளார்.

தமிழக அரசியலையும், தி.மு.க.,வையும் நன்கறிந்த பிரசாந்த் கிஷோர், இப்பிரச்னையை கையிலெடுத்து, அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பியிருப்பதும், உண்மையான வீடியோவை வெளியிடுவதாக கூறியிருப்பதும், தி.மு.க., மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிகளுக்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.


வாசகர் கருத்து (29)

  • Nicolethomson - Chikkanayakkanahalli, Bengaluru, Tumkur Dt,இந்தியா

    PK வின் எச்சரிக்கைக்கு பயந்து சீமான் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது போல இல்லையா?

  • M Ramachandran - Chennai,இந்தியா

    ஸ்டாலினிடம் வட்டி வசூல் செய்யும் , பிகார் பிராமணன். திரவிட குஞ்ஞு களுக்கு பூணுல் அறுக்கும் (சாது ) பிராமணன் ஆகாதே இது எப்படி? தலைவர் (தந்தை) எவ்வழி அவ்வழி. .திருட்டு ரகசியங்கள் கசியாமகளிருக்க மிரட்டி பொண்ணை தன சொந்தத்திற்கு கட்டி வய்த்த திறமை போலா?

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    திமுக அடிமை .... தொழிலாளர் விரோத அரசாக இருந்தாலும் திமுகவை ஆதரிப்பவர்கள் ...

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    இப்போ டீம்கா என்ன சொல்லும் ? உன்னோட புத்தியை காட்டிட்டியே என்று பிரசாந்த் கிஷோரிடம் சொல்லுமே ????

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    ஒன்றுமே இல்லையென்றால் எம்.பி. பாலு அவர்கள் ஏன் பீஹார் முதல்வர் நித்திஷை சந்திக்கவேண்டும் சிராக்கை ஏன் எம்.பி. ஏ.ராஜா அவர்கள் சந்திக்க வேண்டும். மதுரையில் ஏன் முதர்வர் பீஹார் தொழிலாளர்களை சந்திக்க வேண்டும். சட்டியில் இல்லாமல் ஆப்பையில் வாராது. வயிற்றல் புளியைக்கரைத்துவிட்டார் அண்ணாமலை. அது என்ன ஆகப்போகிறதோ - எங்கு போய் முடியப்போகிறது தெரியவில்லை ஆண்டவனுக்கும் ஆளப்போகிறவனுக்குத்தான் வெளிச்சம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement