புதுடில்லி: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி மற்றும் போலி செய்திகளை பரப்பியதாக உ.பி., மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது தமிழக போலீஸ் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், ‛மார்ச் 20 வரை பிரசாந்த் உம்ராவை கைது செய்யக் கூடாது என்றும், முன் ஜாமின் கேட்டு தமிழகத்தில் உள்ள நீதிமன்றத்தை அணுகுமாறும்' நீதிபதி உத்தரவிட்டார்.
பீஹார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார்' என்று கூறியிருந்தார். இப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என தமிழக அரசு கூறியிருந்தது.
இந்நிலையில், பிரசாந்த் உம்ராவ், பல மாநில மக்களிடம் மோதலை உருவாக்க முயற்சி செய்கிறார் என, துாத்துக்குடி மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், பிரசாந்த் உம்ராவை கைது செய்ய, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் டி.எஸ்.பி., வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் அய்யப்பன் உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய தனிப்படை போலீசார், டில்லியில் முகாமிட்டு உள்ளனர்.
இதற்கிடையில் டில்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு பிரசாந்த் உம்ரா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தான் இளம் வழக்கறிஞராக இருப்பதால் தனது பணி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஜஸ்மித் சிங் அமர்வில் இன்று (மார்ச் 07) நடைபெற்றது.
அப்போது, ‛வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி மற்றும் போலி செய்தி பரப்பிய பா.ஜ., நிர்வாகி இதுவரை மன்னிப்புக்கூட கேட்கவில்லை. நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்புகூட அதே வதந்தியை பிரசாந்த் உம்ராவ் பரப்பியுள்ளார்.
இந்த செயல் நாட்டையே பிளவுப்படுத்தும் நடவடிக்கை மட்டுமின்றி, தேச துரோகமும் கூட' என தமிழக போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், முன் ஜாமின் கேட்டு தமிழகத்தில் உள்ள நீதிமன்றத்தை அணுக பிரசாந்த் உம்ராவிற்கு உத்தரவு பிறப்பித்தனர். வரும் மார்ச் 20ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்றும் டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து முன் ஜாமின் கோரிய வழக்கில் பிரசாந்த் உம்ராவின் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
வாசகர் கருத்து (22)
இவருடன் சேர்ந்து இந்த சதியில் ஈடுபட்ட தமிழகத்தில் உள்ள பாஜக அரசியல்வாதிகளையும் கைது செய்ய வேண்டும்!
பாரத மண்ணில் கால் பட்டால் சொறி வரும் என்று சொன்னது தேச விரோதம் இல்லையா , அப்படி சொன்னவன் தமிழகத்தில் சுதந்திரமாக இருக்கிறான்.
இவனுங்க யோக்கிதையை மக்கள் இப்போது நன்றாக புரிந்துகொண்டிருப்பார்கள்.
எல்லா துறைக்கும் நிர்வாக/அதிகார எல்லை உண்டு. தமிழக போலீசார் தலைமை செயலர்/கவர்னர் மூலம் மத்திய உள்துறை வழியாக தான் நடவடிக்கை எடுக்க முடியும். தமிழக போலீசார் போல் பீகார் போலீஸ் சில தமிழக அரசியல் வாதிகளின் வட மாநிலத்தவர்கள் மீது பேசிய வெறுப்பு கருத்தை மேற்கோள் காட்டி, நடவடிக்கை எடுக்கவில்லை.? படித்து வேலைக்கு சேர்ந்தால் பயம் வரும். தமிழகம் தான் ஏராளமான விதி மீறல்கள் செய்து வருகிறது. டெல்லி நீதிமன்றம் தமிழக போலீசார் மீது நடவடிக்கை எடுத்து ஜாமீன் மனு தாக்கல் செய்ய சொல்லி இருக்க வேண்டும்.
//ஹிந்தியில் பேசியதற்காக, தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், 12 பேர் துாக்கிலிடப்பட்டனர். // ஹா ஹா ஹா.. நம்ம அண்ணாமலை, எச் ராசா சர்மா இவர்களுக்கே டஃப் கொடுக்கிற அளவுக்கு நல்ல காமெடியனா இருப்பார் போலிருக்கே.