
மேகாலயாவில் மாநில முதல்வராக கான்ராட் சங்மா இன்று(மார்ச் 07) பதவியேற்று கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகாலாந்து முதல்வர் பதவியேற்பு:
நாகாலாந்து மாநில முதல்வராக என்.டி.பி.பி. கட்சியின் நெய்பு ரியோ பதவியேற்றுக் கொண்டார். நாகாலாந்து மாநிலம் கோஹிமாவில் நடந்த பதவியேற்பு விழாவில் நெய்பு ரியோவுக்கு கவர்னர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!