Load Image
Advertisement

மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி; விவசாயி கைது

தர்மபுரி: பாலக்கோடு அருகே இரண்டு குட்டி யானைகளுடன் சுற்றி திரிந்த 3 காட்டு யானைகள் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இது தொடர்பாக விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டார்.


Latest Tamil News


தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (50) இவருக்கு 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளார். இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்து உள்ளார். இதற்கு நேரடியாக மின்சார கம்பத்திலிருந்து திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து மின்வேலியில் இணைத்துள்ளார்.

Tamil News
Tamil News
Latest Tamil News

அந்த வழியாக இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த 5 காட்டு யானை கூட்டம் மின்சார ஒயரில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை, ஒரு மக்னா யானை என மூன்று காட்டு யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதிர்ஷ்டவசமாக இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பியது. மேலும் வனத்திலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராம விவசாய நிலத்திற்கு வரும் காட்டுயானைகளை அடர்ந்த வனபகுதிகளுக்கு விரட்டாமல் வனத்துறையினர் போக்கு காட்டியும் அலட்சியமாக செயல்பாட்டால் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு 13.05.2022 அன்று மக்னா காட்டு யானையும், சில நாட்களுக்கு பிறகு கூலி தொழிலாளி ஒருவரும் மின்சாரம் தாக்கி விவசாய நிலத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாலக்கோடு வனத்துறையினர் விவாசயி முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குட்டியானை கண்ணீர்


தாய் யானை இறந்த தகவல் அறிந்த குட்டி யானை தாய் உடல் அருகே சுற்றி, சுற்றி வந்தது. இந்த காட்சி பார்ப்போரை கண்கலங்க செய்தது. இறந்த யானைகளின் உடல்களை அகற்ற வேண்டியதால் வனத்துறையினர் வெடி வெடித்து குட்டியானையை விரட்டினர். தற்போது யானைகளின் உடல் மருத்துவ பரிசோதனை நடக்கிறது.வாசகர் கருத்து (17)

 • வேதவல்லி -

  இந்தப் பாவம் தமிழ் நாட்டின் அபசகுணம் பலன் தராத வேள்வியின் வெளிப்பாடு... இதுபோன்ற சில வேள்விகள் இயற்கை சீற்றத்தின் எச்சரிக்கை

 • Pandi Muni - Johur,மலேஷியா

  கொலைகார விவசாயிகளை என்கௌவுண்டர் செய்வதில் தவறில்லை.

 • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

  பிற உயிர்களும் இந்த பூமியில் வாழ உரிமை இருக்கிறது இந்த யானையின் வழித்தடத்தில் விவசாயம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் இல்லையென்றால் இது போன்ற அவலங்கள் விவசாயிகள் என்ற போர்வையில் வாழும் மிருக கூட்டங்களால் நடக்க தான் செய்யும்.

 • சீனி - Bangalore,இந்தியா

  விவசாயிகளை குறைசொல்லி பலனில்லை, அவர்களும் யானைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு ராக்கெட், ஏவுகணை உட்பட பல நவீன தொழில் நுட்பங்கள் வைத்துள்ளது. ஆனால், இரவு நேரங்களில் யானைகள் விவசாய நிலத்துக்கு அருகே வந்தால், மின்னனு சென்சர்கள் யானைகளை கண்டறிந்து, சினிமா பாடல்களையும், பறை இசையை ஒலிபரப்பி யானைகளை விரட்ட முடியாதா? அதே போல், ரயில் விபத்துகளில்லும் யானைகள் இறந்துவிடுகின்றன, எனவே யானைவழித்தடங்களில் வேகத்தை குறைக்கும், அல்லது யானைகள் எதிரே வந்தால் கண்டறியும் தொழில் நுட்பம் கண்டறிய முடியாதா? ஒரு யானையை வளர்க்க வனத்துறை அதிகாரிகள் 10-25 ஆண்டுகள் வனங்களை வளர்த்து, நீர் ஆதாரங்களை பெருக்கி பாடுபடுகிற்றனர், ஆனா ஒரே நிமிடத்தில் இப்படி விபத்த்துகளில் இறந்துவிடுவது வருத்ததுக்குறியது. தொழில் நுட்பம் மட்டுமே ஒரே வழி.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  விவசாயி சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்தது எப்படி மின்சார இலாகா அதிகாரிகளுக்கு தெரியாமல் போகும். இதை நான் நம்ப மாட்டேன். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மாமூலை கொடுத்துதான் அவர் அந்த மின் இணைப்பை பெற்றிருப்பார். இப்ப யானைகள் இறந்தவுடன், அந்த மின்துறை அதிகாரிகள், விவசாயி எங்களுக்கு தெரியாமல், சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்திருக்கிறார் என்று அவரை மாட்டிவிட்டிருக்கின்றனர். இதுதான் உண்மை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement