இது குறித்து, தமிழ்நாடு ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: தமிழகத்தின் பெரிய கோவில்களை மேம்படுத்த, 'மாஸ்டர் பிளான்' திட்டத்தை, ஹிந்து அறநிலைய துறை செயல்படுத்தி வருகிறது.
95 சதவீத தொகை
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், இந்த பணிகளை மேற்கொள்ள, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் களம் இறங்கி உள்ளனர். முதல் கட்டமாக, பக்தர்களிடமிருந்துகாணிக்கையாக பெற்று, வங்கிகளில் நிரந்தரவைப்பு கணக்கில் போட்டுள்ள பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 421 கோடியே 97 லட்சத்து, 98 ஆயிரத்து, 998 ரூபாயை எடுத்துள்ளனர். அதாவது, வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கில் இருந்து,95 சதவீத தொகை செலவழிக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் துணை கோவிலாக, அறநிலைய துறை நிர்வாகத்தின் கீழ், சமயபுரம் கோவில் இருந்து வந்தது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து, கோவில் வருமானமும் பெருகியதால், அக்கோவில் நிர்வாகத்தை, அறநிலைய துறை தனியாக பிரித்தது.
மேலும், வேறொரு கோவில் செயல் அலுவலர் கல்யாணி என்பவர், சமயபுரம் கோவிலுக்கு கூடுதலாக நியமிக்கப்பட்டு, நிர்வாகம் நடத்தப்படுகிறது.
கோவிலில் அறங்காவலர் குழு நியமிக்கப்படாத பட்சத்தில், கோவிலின் மொத்த நிர்வாக பொறுப்பும் செயல் அலுவலரை தான் சாரும். கோவில் நிரந்தர வைப்பு தொகை தொடர்பாக, யார் எந்த முடிவை எடுத்தாலும், அறங்காவலர் ஒப்புதல் இல்லாமல், அதை செயல்படுத்த முடியாது.
சமயபுரம் செயல்அலுவலராக இருப்பதாக கூறும் கல்யாணி, எவ்வித அரசு உத்தரவும் இல்லாமல் அப்பொறுப்பில் செயல்படுகிறார். அவரை வைத்து தான், கோவில் பெருந்திட்ட வளாகம் அமைக்கப்படுகிறது. நிரந்தர வைப்பு தொகையில், தற்போது, 38 கோடி ரூபாய் தான் உள்ளது. விரைவில் அதையும் வேறு பணிகளுக்கு பயன்படுத்த திட்டம் போட்டுள்ளனர்.
அறங்காவலர் அனுமதி இன்றி, இதை செய்ய முடியாது. மேலும், இங்கு முறையாக செயல் அலுவலரை இதுவரை நியமிக்கவில்லை. முறையான அனுமதி இன்றி, ஒருவர் செயல் அலுவலராக செயல்படுகிறார்.
சட்ட விரோத செயல்
அப்படி இருக்கும்போது, 'முதல்வர் உத்தரவு, அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவு' என்று கூறி, நிரந்தர வைப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுத்திருப்பது, சட்ட விரோத செயல். மேலும், சமயபுரம் மாரியம்மன் கோவில் பெருந்திட்ட வளாகம் அமைக்கும் பணியை, செயல் அலுவலர் மேற்பார்வையிடவும், வேறு பணிகளுக்காகவும், அவருக்கு, 'இன்னோவா கார்' வாங்க, நிரந்தர வைப்பு தொகையில் இருந்து, 25 லட்சம் ரூபாய் எடுத்துள்ளனர்.
கட்டுமான பணிகளுக்கு என கோவில் பணத்தை எடுத்து, அதை வைத்து கட்டடம் கட்டுகின்றனர். கட்டடம் கட்டும் பணியில் தான் 35 சதவீதம் வரை 'கமிஷன்' பெற முடியும். சமயபுரம் கோவிலுக்கு மட்டும், 422 கோடி ரூபாய் கட்டுமான பணிக்காக செலவு செய்யப்படுகிறது. அதில், 35 சதவீதம் 'கமிஷன்' என்றால், அந்த தொகை எவ்வளவு வரும் என்பதை, பக்தர்கள் கணக்கு போட்டுகொள்ளலாம்.
இப்படி இஷ்டத்துக்கும் தி.மு.க., அரசு நிர்வாகம், பக்தர்களின் காணிக்கை பணத்தை சுரண்டுகிறது. சட்டவிரோதமாக நடக்கும் இந்த காரியத்தை எதிர்த்து வழக்கு தொடரப் போகிறேன். இவ்வாறு டி.ஆர்.ரமேஷ் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (42)
பணம் என்றாலே அவர்களுக்கு கை அரிக்கத்தான் செய்யும் ....
அரசாங்கம் கோயில் காணிக்கையில் கையை வைத்து தனது சில்லறை புத்தியைக் காட்டுது ....
அறநிலையத்துறையின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை... கோவில்கள் தனியார் வசம் இருந்தால் கேள்வி கேட்கமுடியாது என்று தான் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது... இப்பொழுது இந்த கூத்தை பார்த்தல் அனைவருமே திருடர்கள் தான் என்பது புரிகிறது.
நரியை காவலுக்கு வைத்தால் ...... பத்திரமாக இருக்க வாய்ப்பே இல்லை..
என்ன அக்கிரமம் இது நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக உள்ளதே? இந்து விரோத ஆட்சி- கட்சி. அதிகார விதிமீறல். திரு டி.ஆர். ரமேஷ் அவர்களுக்கு நாமனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும்.