ADVERTISEMENT
விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், அங்குள்ள கிராம மக்கள் குடிநீர் வருவதில்லை என குற்றம் சாட்டினர். அப்போது ஆவேசமடைந்த பொன்முடி, 'இந்த கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டுப்போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்க..' எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அருங்குறிக்கை கிராமத்தில் அரசு பள்ளி கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றார். 'உங்கள் கிராமத்தில் ரோடு வசதி, தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை நான் தான் செய்து கொடுத்தேன்' என பொன்முடி பேசி கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் எழுந்து குடிநீரே வருவதில்லை எனக்கூறி கூச்சல் எழுப்பினர்.

இதனால் ஆவேசமடைந்த பொன்முடி, 'இந்த அருங்குறிக்கை கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டுப்போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்க..' என பேசியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கூட்டத்தை வேகமாக முடித்துவிட்டு அமைச்சர் கிளம்பி சென்றார்.
இதற்கு முன்பாக, பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டம் தொடர்பாக பேசுகையில், 'பஸ்சில் பெண்கள் எல்லாம் எப்படி போகிறீர்கள்? எல்லாம் ஓசி... ஓசி பஸ்சில் போகிறீர்கள்' என்றார்.
வாசகர் கருத்து (63)
இவெனெல்லாம் ஒரு அமைச்சரா , பொது வெளியில் எப்படி நாகரிகமா பேசத்தெரியாத பயலுக எல்லாம் அமைச்சு ஆனால் இப்படித்த,, ஏற்கெனவே ஓசி பஸ்னு சொன்னான், இவன் எல்லாம் ஒரு ஆளு .
எனக்கு - இவரை பார்த்தால் - மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் வடிவேலுவை - கீழே இறங்கு - கேட்டுக்கொள்ள வா - என்று சைக்கிளில் ஒருவர் உக்கார சொல்வாரே - அவர் நியாபகம்தான் வருது
இதை விட மிக மட்டமாக திட்டுங்கள் அப்போது கூட எங்கள் தமிழ் மக்கள் திருந்த மாட்டோம் எப்படியும் அடுத்த தேர்தலில் ரெண்டு பட்டு சேலை கோழி பிரியாணி போடுவீங்க என்று எங்கள் மக்களுக்கு நல்லா தெரியும்
என்னதான் கேவலமாக அவர் பேசினாலும் அவர்தான் அமைச்சர். உடனே முதலமைச்சர் அவர பதவில இருந்து இறக்கிடவா போறார்..இன்னும் கேவலமாகதான் பேசுவார்..தாங்கிக்கோங்க..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதுதான் திராவிட மாடல் இலவச சாமான்களுக்கும், குஆர்டெர், கோழி பிரியாணிக்கும் ஆசைப்பட்டு ஓட்டுபோடுவதன் விளைவு இதுதான். மக்களே விழித்திக்கொள்ளுங்கள், நாட்டையே சுரண்டும் கூட்டம் உங்கள் உடமைகளையும் சுரண்ட எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும். நமது கலாச்சாரத்தை அழிக்க கங்கணம் கட்டி செயல் படும் கூட்டம் இது. நமது கோவில்களை இடித்ததாக பெருமையுடன் சொல்லும் அரசு உங்கள் வீட்டையும் இடிக்க தயங்க மாட்டார்கள். நமது நம்பிக்கையையும், நமது தேவைகளையும் சற்றும் கண்டு கொள்ளாத இந்த "அரசியல்வியாதிகள்" நமக்கு தேவைதானா ? சிந்தியுங்கள் செயல்படுங்கள் தமிழ் வாஸ்க ஜெய் ஹிந்த்