‛‛நான் ஆட்டோக்காரன்....ஆட்டோக்காரன்: மும்பை சாலையில் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்த பில்கேட்ஸ்
புதுடில்லி: இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் மும்பை சாலையில் ஆட்டோ ஓட்டி மகிழும் வீடியோ காட்டசி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவிற்கு வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலக பண காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று(மார்ச் 06) இந்திய தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திராவை சந்தித்தார்.
அப்போது பில்கேட்ஸ் மகேந்திரா நிறுவனத்தின் மின்சார ஆட்டோ ஒன்றினை மும்பை சாலையில் ஓட்டி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை, தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு கூறியிருப்பதாவது: ‛ இது இனி பில்கேட்ஸ் கார்'... இதை ஓட்டிப் பார்க்க உங்களுக்கு நேரம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அடுத்த முறை பில்கேட்ஸ் இந்தியா வரும் போது சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் தான் ‛ ட்ரியோ ஆட்டோ ரிக்ஷா' பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (7)
ஹைய்யா! அமேரிக்கா அம்பானி இந்தியா வந்து வித்த காட்டுறார்! எல்லோரும் ஜோரா கை தட்டுங்கோ!!!
இது பிசினஸ் ட்ரிக் என்றுகூட தெரியாமல் இதற்கு போயி ...... அதுசரி நம்ம நாட்டுல பொய்களாலும் நாடகங்களாலும்தானே அரசுகள் நடத்தப்படுகின்றன. முன்னமே இதை இந்த பில்கேடீஸ் தெரிந்து வைத்திருப்பார்.
அய்யா bill gates தங்களிடம் ஆட்டோ ஓட்ட லைசென்ஸ் உள்ளதா....
டில்லியில் அமெரிக்க வெளியுறவு செயலர் ஆட்டோவில் பயணம் போல
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அவரு பில்கேட்ஸ் என்பதால் இந்திய வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே, வாகனம் ஓட்ட அனுமதிபார்கள்