இரட்டை வேடம் போடுவது திமுகவிற்கு இயல்பானது: அண்ணாமலை
சென்னை: இரட்டை வேடம் போடுவது திமுகவிற்கு இயல்பானது தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டி வைக்கும் இரட்டை வேடம் திமுகவிற்கு கைவந்த கலை.
‛ஹிந்தி தெரியாது போடா' என்று முதல்வரின் மகன் டி- ஷர்ட் கலாசாரத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் துவங்கி வைக்க..விமான நிலையத்தில் என்னிடம் ஹிந்தியில் பேசினார்கள் என்று முதல்வரின் தங்கை, திமுகவின் எம்பி ஒரு பொய்யான புகாரை வழங்கி..வட மாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் துவங்கி வைத்தார். தற்போது சமூகங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கும் இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

வட மாநிலத்தவர் தொடர்பான பிரச்னையை திசை திருப்ப இப்போது என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பூரில் விரும்பத்தகாத சம்பவம் நடந்த போது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?. பிரிவினையில்லாத நல்லிணக்கத்தை நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையை பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (33)
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது ஆம் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது ...என்று பிரிவினைவாத பேச்சுக்களை தமிழகத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்பே அறிமுகம் செய்த திராவிட திமுக கட்சிக்கு அண்ணாமலையை குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை. உண்மையிலே வடக்கு வாழ்ந்து ,தெற்கு தேய்ந்து இருந்தால் தென்மாநிலங்களில் இருந்து பிழைப்பை தேடி அல்லவா ,வடமாநிலங்களுக்கு மக்கள் சென்றிருக்க வேண்டும் .அப்படி எதுவும் நடக்க வில்லையே .உண்மையிலே ,கடந்த ஐம்பது வருடங்களாக பொய் ,புரட்டு ,பித்தலாட்டங்கள்,மோசடிகள் செய்து தமிழக மக்களின் மனதில் வடமாநிலங்கள் குறித்த தவறான தகவல்களை சொல்லி ஆட்சி நடத்தும் திராவிட இயக்கங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். பசு குண்டர் ஒருவர் தவறு செய்தால்,ஒரு சிறுபான்மையினர் வட மாநிலங்களில் தாக்கப்பட்டால் ,தமிழகத்தில் மதசார்பின்மை கட்சிகள் அந்த மாநிலங்களே தவறு செய்தது போல ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்களே அது பிரிவினை வாதம் இல்லையா ? நடுநிலையாளர்களே சிந்தியுங்கள்
ஆமா... நீ இன்னும் கர்நாடகாவுக்கு போகலையா....? உன்னைத்தான் அமித்ஷா அங்க டிரான்ஸ்பர் பண்ணிட்டாரே....? வருங்கால இந்திய நாட்டு ஜனாதிபதி”...ன்னு வடிவேல் பட காமெடி மாதிரி... இவரோட அல்லக்கைங்க சொல்லுதுங்க... ஒரு ஆளை டெபுடேசன்..லேயோ அல்லது டிரான்ஸ்பர் பண்றாங்கன்னா, என்ன அர்த்தம். தப்பு பண்ணாத்தான் இதுமாதிரி பண்ணுவாங்க... இதுகூட தெரியாம, அந்த அல்லக்கைங்க கூவுதுங்க....
உன் கட்சியில் இருந்து இரண்டாவது விக்கெட் இன்று காலி. இந்த இரண்டு விக்கெட் களும் சோசியல் மீடியாவில் உன்னை நாறடிக்கிறானுங்க.
உங்கள் கட்சி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு வேடம் போடுகிறது .
எப்படி நீ கர்நாடகா போனா கன்னடன் , தமிழ் நாட்டுக்கு வந்தா தமிழன் அந்த மாதிரியா , ஒழுங்கா "ழான்னா" சொல்லி பழகு ......