சென்னை: வட மாநில தலைவர்கள் பிரச்னை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கு குறித்த தகவல் கிடைத்ததும் முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள், 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன் என்று சவால் விட்டுள்ளார்.

வட மாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தவறான தகவலை பரப்பும் வகையில் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
பீஹார் நிர்வாகி மீதும்
மேலும், இந்த விவகாரத்தில் பீஹார் பா.ஜ., டுவிட்டரை நிர்வகிக்கும் நபர் மீதும் 153, 153A(1)(a), 505(1)(b) IPC 505(2) ஐபிசி ஆகிய பிரவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜனநாயக குரலை நெறிக்கும் எண்ணத்தில் வழக்கு போட்டுள்ளனர். 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன். தமிழக அரசு முடிந்தால் என்னை கைது செய்யட்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (62)
நானும் ரவுடிதான்.
இத்தெ வாய்தான் வடமாநிலத் தொழிலாளர்கள் பற்றிய விஷயத்தில் தமிழ்நாடு அரசுடன் துணை நிக்கிறோம்னு சொல்லிச்சு.
அண்ணாமலை எப்போது தமிழக முதல்வர் ஆவார் என்று மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்
அவர்கள் பேசியத்தைத்தானே அண்ணாமலை வெளியிட்டுள்ளார் அவர்கள் அப்படி ஏன் பேசவேண்டும் அவைகள் தவறு அன்று யாருமே கூறவில்லையே. இது உண்மையை மறைக்க சதியாகும். பழி ஒரு பக்கம் பாபம் ஒரு பக்கம் போலத்தானாகும்
தினம் மேக்-அப் போட்டு, துண்டு சீட்ட கைல வைச்சுக்கிட்டு பதுசா போஸ் கொடுத்துட்டு உண்மைய வெளிச்சம் போட்டு காட்டுறவங்கள பதிவிய துஸ்பிரயோகப்படுத்தி மிரட்ட வேண்டியது. தவறுகள் சில செய்தாலும் ஜெயா எப்பொழுதும் கன்சிஸ்டெண்டாக இருந்தார். இந்த மாதிரி இரட்டை வேடம் போடும் தலைவர்களிடம் மக்கள் எச்சரிக்கையா இருக்கனும். இந்த புருடா திராவிட மாடல்னா மட்டமான மாடல்னு தினம் தினம் நிரூபிச்சுக்கிட்டு இருக்கானுங்க.