Load Image
Advertisement

நிலக்கரி கையாண்டதில் ரூ.908 கோடி ஊழல் 10 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

சென்னை:மின் வாரியத்திற்கு, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துறைமுகம் வாயிலாக நிலக்கரி கையாண்டதில், 908 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, முன்னாள் தலைமை பொறியாளர் உட்பட, 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழக மின் வாரிய அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிலக்கரி, ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி.வேலி ஆகிய சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.

இந்த நிலக்கரி, ஒடிசாவில் உள்ள பாரதீப், ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு அனுப்பி, அங்கிருந்து தமிழகத்திற்கு கப்பல்களில் எடுத்து வரப்படுகிறது.

விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக, நிலக்கரி கையாளும் ஒப்பந்த பணியை, 'சவுத் இந்தியா கார்ப்பரேஷன்' நிறுவனம் மேற்கொண்டது.

கடந்த, 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், மின் வாரிய அதிகாரிகளும், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தினரும், அதிக வரி செலுத்தியதாக போலி ரசீதுகளை தயாரித்து, கூட்டுச்சதியில் ஈடுபட்டு, 1,028 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாக அறப்போர் இயக்கத்தினர், லஞ்ச ஒழிப்பு துறையில், 2018ல் புகார் அளித்தனர்.

இதன் மீது விரிவான விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2011 முதல் 2016 வரை, 908 கோடி ரூபாய் ஊழல் நடந்ததை உறுதி செய்துள்ளனர்.

இதற்கு காரணமான, மின் வாரிய நிலக்கரி பிரிவு முன்னாள் தலைமை பொறியாளர் பழனியப்பன், நிலக்கரி பிரிவு முன்னாள் இயக்குனர் செல்லப்பன், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தினர் உட்பட, 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பான விரிவான விசாரணை, விரைவில் துவங்கும் என, போலீசார் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement