ராகுல் பெயரை சொல்ல தயக்கம்: ஸ்டாலின் பேச்சால் காங்., கலக்கம்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட, பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என, ஸ்டாலின் கூறியிருந்தார்.
ஒற்றுமை
அதனால், 'காங்கிரஸ் தலைமையில் தேர்தலை சந்திப்போம்; ராகுல் பிரதமர் வேட்பாளர்' என்பதாகக் கூட இருக்கலாம் என்ற அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், பரூக் அப்துல்லா, அகிலேஷ், தேஜஸ்வி ஆகியோர், 'பிரதமர் மோடிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்' என்பதை வலியுறுத்தினரே தவிர, 'காங்கிரஸ் தலைமையில் தேர்தலை சந்திப்போம்' என்றோ, 'ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்போம்' என்றோ, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
மாறாக, 'யார் பிரதமர் என்பது முக்கியம் அல்ல.
'எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையே இன்றைய தேவை' என்று பரூக் அப்துல்லாவும், 'பா.ஜ.,வுக்கு எதிராக, வலுவான ஒரு மாற்றுச் சக்தியை உருவாக்க, முதல்வர் ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது' என, தேஜஸ்வி யாதவும் பேசினர்.
காங்கிரசுக்கும், ராகுலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும், ராகுல் தலைமையில் லோக்சபா தேர்தலை சந்திக்கவும் விரும்பவில்லை என்பதையே, அவர்களது பேச்சு வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்கள் முன், சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில், ராகுலை பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் முன்மொழிந்தார்.
எனவே, இந்த பொதுக்கூட்டத்தில் அது தொடர்பான முக்கிய அறிவிப்பை, ஸ்டாலின் வெளியிடக்கூடும் என, காங்கிரஸ் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்துள்ளது.

அதனால் தான், ஸ்டாலினுக்கு முன்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, '2024 லோக்சபா தேர்தலிலும் தி.மு.க., -- காங்கிரஸ் கூட்டணி தொடரும்' என்ற அறிவிப்பை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், 'காங்கிரஸ் அல்லாத கூட்டணி நடைமுறைக்கு சரிவராது' என்றார்.
கூட்டணி
அதே நேரத்தில், 'காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என்றோ, மோடியை எதிர்க்க ராகுல் தான் சரியான தலைவர்' என்றோ அறிவிக்கவில்லை. இது, காங்கிரஸ் தலைவர்களை வருத்தம் அடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
'குறைந்தபட்சம், தேசிய கட்சியான காங்கிரஸ் தலைமையில் தேர்தலை சந்தித்தால் தான், மோடியை வீழ்த்த முடியும் என்றாவது ஸ்டாலின் பேசியிருக்கலாம்' என, காங்கிரஸ் தலைவர்கள் புலம்புகின்றனர்.
வாசகர் கருத்து (33)
தயக்கத்தின் காரணம் சென்ற நாடாளும் மன்ற தேர்தலில் ஸ்டாலின் நம்பிக்கையுடன் காங்கிரஸ் தலமை மேல் நம்பிக்கையுடன் ராவுளுவை பிரதமராக முன் மொழிந்தார். அதில் காங்கரஸ் அகில இந்திய அளவில் பட்டஅடி தற்போனது யோராசிக்க வைக்கிறது.அவர்களிடம் நாட்டிற்கான நாட்டிற்கான நல்ல திட்டங்கள் ஏதும் இல்லை. அவர்கள் பேச்சில் மோடி வெறுப்பு ஒன்று தான் தலை தூக்கி நின்றது .அதனால் தான் தூக்கி எறிந்து விட்டார்கள். இன்னமும் திருந்திய பாடில்லை. அது தவிர அயல் நாடுகளுடன் சேர்ந்து சதி வேலை அரங்கேற்றியது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இது தெரிந்து தான் ஸ்டாலின் தயக்கம் காட்டுகிறார்.தமிழ்நாட்டில் வேண்டுமானால் காங்கிரஸ் தீ மு க்கா தயவால் சில இடங்களை பெற்று விடலாம் . ஆனால் அகில இந்திய நிலையில்??. இதுவும் தயக்கத்திற்கு காரணமாக இருக்கும் .
அவருக்கு எழுதி குடுக்கணுமுங்க
ராகுலைக் கைவிடமாட்டோம் ..... குடும்ப அரசியலைக் கைவிட மாட்டோம் என்று காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தால் அது ஸ்டாலினின் தவறா ????
Ya dad will take over pm post son will take cm post of tamilnadu haaaaaa
அப்படியே, மம்தா, சந்திரபாபு நாயுடு மற்றும் கேஜ்ரிவாலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.