மதுரை: மத்திய அரசு முறையாக ஆய்வு நடத்தாதே மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு காரணம். மதுரை எய்ம்ஸ் 2028 டிசம்பரில் தான் முடியும் என அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில - மத்திய அரசின் கூட்டுநிதியில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது. மதுரை எய்ம்ஸ்க்கு மட்டுமே ஜெய்கா நிறுவன நிதியுதவியுடன் கட்டுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை வலியுறுத்தி வருகிறோம்.
மத்திய அரசு முறையாக மதுரை எய்ம்ஸ் பணிகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளதாதே மதுரை எய்ம்ஸ் பணி துவங்க தாமதம் ஏற்பட்டது. மதுரை எய்ம்ஸ் கட்டட பணி 2024 டிசம்பரில் தான் துவங்கும். 2028 டிசம்பரில் தான் முடியும்.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 110பேருக்கு பாலின மாற்றுஅறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் செயற்கை கருத்தரிப்பு மையம் துவங்குவதற்கான பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (6)
இதிலிருந்து என்ன தெரிகிறது,மாநில அரசு நிர்வாகம் எய்ம்ஸ் கட்டுவதை தங்களால் முடிந்த அளவு தாமதமாக கட்டுமான பணிகள் நடக்க வைப்பர்.நிதி மத்திய அரசு கொடுத்தாலும் அதை செயல்படுத்த வேண்டியது திமுக அரசு,ஆதலால் எய்ம்ஸ் சீக்கிரம் வந்தால் பா ஜ க விற்கு பெயர் வரும் அதனை தடுத்தால் தான் எய்ம்ஸ் வர லேட்டாகுது என்று பொய் அரசியல் செய்து லாபம் அடையலாம் என்று திமுக அரசு நினைக்கிறது.திமுக அரசிற்கு தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லை என்பதை பிரதிபலிப்பு ஆக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகிறார்.அமைச்சரே உங்க உடல்நிலை கவனிக்கின்ற மாதிரி மக்களோட சுகாதார நிலையும் உங்கள் கைகளில் உள்ளது என்பதை மறக்காதீர்கள். மாரத்தான், வாக்கிங் ஓடுவதில் காட்டும் ஆர்வத்தில் கொஞ்சமாவது அரசாங்க மருத்துவமனையில் மருந்து கிடைப்பதில்லை போன்ற நிறைய குறைகள் உள்ளன.அதை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள்.நீங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஓடி விட்டது.உங்க தலைவரோட பையன் படம் எப்படி ஓடுது என்று மக்களிடம் நீங்கள் செய்யும் ஆராய்ச்சியை விட்டு விட்டு அதே மக்களிடம் அரசு மருத்துவமனை எப்படி உள்ளது என்று கேட்கலாமே.
மோடி அரசாங்கத்தை நம்பி பிரயோஜனம் கிடையாது. அவர்கள் ஆளுகின்ற மாநிலத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். ஜப்பான், சீனாவிடம் கூட கேட்டால் கொடுப்பார்கள். நீங்கள் அடிக்க வேண்டிய கமிஷன் எடுத்துக்கொண்டு மக்களுக்கு ஏதாவது நண்மை செயுங்கள்.
ரெண்டு வருசமா நீங்க என்னத்த கிழிச்சேயென்க - செங்கல் திருடிட்டு போனதா தவிர
இருந்த ஒத்த செங்கல் திருட்டு போய் விட்டது. திருடனை பிடிக்க முடியாமல் தவித்து வரும் அமைச்சர் என்ன செய்ய போகிறார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது,மாநில அரசு நிர்வாகம் எய்ம்ஸ் கட்டுவதை தங்களால் முடிந்த அளவு தாமதமாக கட்டுமான பணிகள் நடக்க வைப்பர்.நிதி மத்திய அரசு கொடுத்தாலும் அதை செயல்படுத்த வேண்டியது திமுக அரசு,ஆதலால் எய்ம்ஸ் சீக்கிரம் வந்தால் பா ஜ க விற்கு பெயர் வரும் அதனை தடுத்தால் தான் எய்ம்ஸ் வர லேட்டாகுது என்று பொய் அரசியல் செய்து லாபம் அடையலாம் என்று திமுக அரசு நினைக்கிறது.திமுக அரசிற்கு தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லை என்பதை பிரதிபலிப்பு ஆக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகிறார்.அமைச்சரே உங்க உடல்நிலை கவனிக்கின்ற மாதிரி மக்களோட சுகாதார நிலையும் உங்கள் கைகளில் உள்ளது என்பதை மறக்காமல் மராத்தான்,தினமும் வாக்கிங் ஓடுவதில் காட்டும் ஆர்வத்தில் கொஞ்சமாவது அரசாங்க மருத்துவமனையில் மருந்து கிடைப்பதில்லை போன்ற நிறைய குறைகள் உள்ளன.அதை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள்.நீங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஓடி விட்டது.உங்க தலைவரோட பையன் படம் எப்படி ஓடுது என்று மக்களிடம் நீங்கள் செய்யும் ஆராய்ச்சியை விட்டு விட்டு அதே மக்களிடம் அரசு மருத்துவமனை எப்படி உள்ளது என்று கேட்கலாமே.