ADVERTISEMENT
ஆத்துார்:ஆத்துார் அருகே பட்டப்பகலில் மூதாட்டியை கொடூரமாக தாக்கி, இரு காதுகளையும் அறுத்து, 22 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி காமராஜர் நகரை சேர்ந்தவர் அங்கமுத்து, 80, அரசு ஓய்வு பெற்ற டிரைவர். இவரது மனைவி செல்லம்மாள், 74.
அப்போது, காலை, 11:30 மணிக்கு ஹோட்டலுக்கு சென்று உணவு வாங்கி வருவதாக கூறி அங்கமுத்து ஆத்துார் புறப்பட்டார்.
வீட்டில் தனியே இருந்த செல்லம்மாள், உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்ல, நகைகளை அணிந்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென நுழைந்த அந்த மர்ம நபர், செல்லம்மாள் தலையில் சுத்தியலால் தாக்கி, அரிவாளால் வெட்டி, இரு காதுகளையும் கத்தியால் அறுத்து நகைகளை பறித்தார்.
அந்த மூதாட்டி அணிந்திருந்த இரண்டு சங்கிலி, வளையல், தோடு என, 22 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பினார்.
மதியம், 1:30 மணிக்கு வீட்டுக்கு வந்த அங்கமுத்து, மனைவி மயக்க நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆத்துார் ரூரல் போலீசார், கொடூர கொள்ளையில் ஈடுபட்டவர் குறித்து விசாரிக்கின்றனர்.

இவர்கள், தோட்டத்துடன் கூடிய வீட்டில் வசிக்கின்றனர். நேற்று தோட்டத்திற்கு வந்த 30 வயது நபர், பாக்கு தோப்பு குத்தகை தொடர்பாக பேச வந்துள்ளதாக கூறினார்.
அப்போது, காலை, 11:30 மணிக்கு ஹோட்டலுக்கு சென்று உணவு வாங்கி வருவதாக கூறி அங்கமுத்து ஆத்துார் புறப்பட்டார்.
வீட்டில் தனியே இருந்த செல்லம்மாள், உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்ல, நகைகளை அணிந்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென நுழைந்த அந்த மர்ம நபர், செல்லம்மாள் தலையில் சுத்தியலால் தாக்கி, அரிவாளால் வெட்டி, இரு காதுகளையும் கத்தியால் அறுத்து நகைகளை பறித்தார்.
அந்த மூதாட்டி அணிந்திருந்த இரண்டு சங்கிலி, வளையல், தோடு என, 22 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பினார்.
மதியம், 1:30 மணிக்கு வீட்டுக்கு வந்த அங்கமுத்து, மனைவி மயக்க நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆத்துார் ரூரல் போலீசார், கொடூர கொள்ளையில் ஈடுபட்டவர் குறித்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!