சென்னை: ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், வரும் 5ம் தேதி உண்ணாவிரதம் அறிவித்துள்ள நிலையில், முதல்வர் தங்களை அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் கையெழுத்திட்டு, முதல்வருக்கு அனுப்பி உள்ள மனு:
எங்கள் அமைப்பு, 2017ல் துவக்கப்பட்டது. நியாயமான கோரிக்கைகளுக்காக, முந்தைய ஆட்சியாளர்களின் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு, தொடர்ச்சியாக போராட்ட இயக்க நடவடிக்கைகளை எடுத்தது.

கடந்த, 2021ல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆதரவோடு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க., தலைமையிலான ஆட்சி அமைந்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம்.
ஆனால், அடிப்படை உரிமையான, அகவிலைப்படி என்பதே மறுக்கப்படக் கூடிய நிலைக்கு, தற்போது தள்ளப்பட்டு உள்ளோம். ஈட்டிய விடுப்பை சரண் செய்து, பணப்பயன் பெறக்கூடிய உரிமை, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2003 ஏப்.,1க்கு பின், பணியில் சேர்ந்தவர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது, எட்டாக்கனியாக உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஜாக்டோ - ஜியோ வாழ்வாதார கோரிக்கைகளை வென்றெடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுஉள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 5ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம்; வரும், 24ம் தேதி 20 ஆயிரம் கி.மீ., மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
முதல்வர், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எங்களுடன் இணைந்து செயலாற்றியதை நினைவு கூர்கிறோம். எனவே, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (21)
ஆமா! எதுக்கு ஜியோ காரங்க சங்கம் வெச்சுகிட்டு எங்கள் தளபதிக்கிட்டே பேசனும்னு அடம் புடிக்கிறாங்க!!ஏற்க்கெனவே சிம்ல கொள்ளையடிச்சது பத்தாதா?? சம்மளம் பத்லேன்ன இவவங்களை வேவைக்கு வச்சிருக்க அம்பானிகிட்டேதானே கேக்கனும். அறிவு கெட்டவனுக!!
Majority of government revenue is going for government employees salaries. Still they want more and more. In any day, whether this association has advised their membners to work hard and not to involve in corruptions. What ever salary is given now itself is more there should be a cut in their benefits. If these people say the salary is not enough, kindly think the people who have no jobs/ working in private sector.
ஒன்னொன்னுக்கும் மாதம் அறுபதாயிரத்திற்கு குறையாமல் சம்பளம், தினந்தோறும் கிம்பளம், பஞ்சபடி,பட்டினிப்படி, வாரிசுக்கு வேலை, பென்ஷன், மருத்துவக்காப்பீடு குடும்பத்திற்கும் சேர்த்து, வருடத்திற்கு நாற்பது நாள் விடுப்பு, மூன்று மாதம் மருத்துவ விடுப்பு, பத்து மணிக்கு வேலை என்றால் போவது பத்தரை மணிக்கு, ஐந்துமணிக்கு முன்பே எஸ்கேப் அப்போது பெண்களை சினிமா தியேட்டரிலும் ஆண்களை டாஸ்மாக்கிலும் பார்க்கலாம், டி லன்ச் பிரேக் என்று இரண்டுமணி நேரம் பொழுதுபோக்கு, வேலை பாப்பதுபோல் மொபைல் அரட்டை, நடுநடுவில் வீட்டிற்கு அல்லது சொந்த வேலைக்கு எஸ்கேப். அலுவலக லேண்ட் லைன் ஒயரை பிடுங்கிவிட்டுவிடுவார்கள் பொது ஜனம் ஒருவர் கூட தொடர்பு கொள்ள முடியாது, அலுவலக ஈ மெயிலை ஒருவரும் பார்ப்பதும் இல்லை பதில் அளிப்பதும் இல்லை, அலுவல்க நேரத்தில் புடவை பாவாடை வியாபாரம், தீபாவளி பொங்கல் சீட்டு, மாதாந்திர சீட்டு, வட்டி பிசினஸ் இப்படிப்பட்ட தியாகிகளுக்கு பழைய பென்சன், கண்டிப்பாக வாரிசுக்கு வேலை, சுற்றுலா செல்விற்கு பணம் போன்ற நியாயமான கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றவேண்டும்.
உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்
என்பது தொண்ணூறுகளில் நான் காலை பணிமுறை முடிந்து 6 -2 கோட்டை ஸ்டேஷநில் மின் ரயில் ஏறப்போகும்போது இந்த அரசுஊழியர்கள் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு போக ரயில் ஏறுவார்கள் .அதேபோலசேப்பாக்க நிலையத்தில் காலை பனிரெண்டு மணி வரை பணிக்கு செல்வதற்காக வருவார்கள் இவங்க கோரிக்கையை கண்டிப்பாக முதல்வர் நிறைவேற்றணும் மக்களுக்கு பத்து பைசா கூட செலவு செய்யவேண்டாம் அரசின் மொத்த வருவாயையும் இவங்க சம்பளத்துக்கு ஓய்வூதியத்துக்கும் கொடுத்தாலும் திருப்தியடைய மாட்டார்கள்