Load Image
Advertisement

விவசாயம் காத்திட விவசாயிகள் வாழ்ந்திட

Latest Tamil News

விவசாயத்தை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும், விவசாயிகளின் அந்தஸ்தை அரசு உயர்த்திட வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தனி ஒருவனாக மாட்டு வண்டியில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 3600 கி.மீட்டர் பயணத்தைத் தொடங்கியுள்ளார் பயணம் மேற்கொண்டுள்ள சந்திர சூரியன் இப்போது கரூர் மாவட்டம் பரமத்தி வேலுார் பகுதிக்கு வந்துள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் சந்திரசூரியன் (32). பட்டதாரி இளைஞரான இவர் கல்லூரி படிப்பை முடித்தவர். திருமணம் முடிந்து ஒரு மகன் உள்ளனர். தான் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைத்தும் பணிக்கு செல்லாமல் விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது சொந்த ஊரிலேயே கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
Latest Tamil News

இளைஞர்கள் பலரும் வெளிநாடு மற்றும் அரசு வேலை என்று அடிமையாய் இருக்கவே ஆசைப்படுகின்றனர் இதன் காரணமாக அழிவது விவசாயம்தான் விவசாயம் அழிந்தால் ஒட்டுமொத்தமாக எல்லாமே அழிந்துவிடும் இதை மத்திய மாநில அரசுகள் உணர்ந்து விவசாயத்தையும் விவசாயிகளையும் உயர்ந்த அந்தஸ்தில் வைக்கவேண்டும் அப்போதுதான் அனைவரது பார்வையும் குறிப்பாக வேலை தேடும் இளைஞர்கள் பார்வை விவசாயத்தின் பக்கம் திரும்பும் என்பதை உணர்ந்த சந்திரசூரியன் இதை நாட்டு மக்களுக்கு உணர்த்த விரும்பினார்.

இதற்காக நண்பர்கள் உறவினர்கள் உதவியுடன் 80 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு மாட்டு வண்டியை வடிவமைத்து கடந்த ஜனவரி மாதம் தனது பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து துவக்கிவிட்டார்.ஒரு நாளைக்கு காலையில் ஐந்து கிலோமீட்டர் மாலையில் ஐந்து கிலோமீட்டர் துாரம் பயணம் மேற்கொள்கிறார்.பயணத்தின் முடிவில் கிடைக்கக்கூடிய இடத்தில் தங்கிக் கொள்கிறார்.தங்கிக் கொள்ளும் இடத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் தனது பிரச்சாரத்தின் போது வேளாண் விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைத்திடவும்,அழிந்து வரும் நாட்டு இன மாடுகளை காத்திடவும், ரசாயன உரங்களிடம் இருந்து நம் மண்ணை மீட்டுடவும் வேண்டும் என்பது போன்ற விஷயங்களையும் வலியுறுத்துகிறார்.

மாட்டு வண்டியில் இவருக்காக ஒரு செட் கூடுதல் உடையைத் தவிர வேறு எதுவும் இவருக்கானது இல்லை,வண்டியில் உள்ள மற்ற இடங்கள் முழுவதிலும் மாட்டுக்கு தேவையான பருத்திக்கொட்டை,புண்ணாக்கு, புல்லுக்கட்டு போன்றவகைகள்தான் நிறைந்திருக்கிறது.

.இரண்டு மாத பயணத்திற்கு பிறகு இப்போது பரமத்தி வேலுார் பகுதிக்கு வந்துள்ளார்.நடுவில் இவருக்கு திடீர் என கைவலி வந்துவிட்டதால் பயணத்தை தொடரமுடியாமல் சிரமப்பட்டார் ஆனாலும் கொண்ட லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்தினால் வீட்டிற்கு திரும்பாமல் இருந்த இடத்தில் இருந்தபடியே கைவலிக்கு வைத்தியம் செய்து கொண்டு தற்போது பயணத்தை தொடர்ந்துள்ளார்.

மாட்டுவண்டியின் மேலே சோலார் பேனல் வைத்துள்ளார் இதன் மூலம் மொபைல் போனை சார்ஜர் செய்து கொள்கிறார் அவருக்கான உணவை அவர் தங்குமிடத்தில் பார்த்துக் கொள்கிறார்.இதுவரை பயணப்பட்டதில் எல்லா ஊரிலும் உள்ள மக்கள் அன்பான வரவேற்பு கொடுத்துள்ளனர்.மக்கள் தந்துவரும் உற்சாகம் காரணமாக எனது லட்சிய பயணத்தை நிச்சயம் முடிப்பேன் எனும் சந்திரசூரியனை வாழ்த்த நினைப்பவர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசுவதற்கான எண்:9942122121.

-எல்.முருகராஜ்


வாசகர் கருத்து (2)

  • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

    இந்த விளம்பரம் மிக மதிப்பு மிக்கது. இவரும் மதிப்பு மிக்கவர். நானும் காங்கேய நாட்டு மாடும் வளர்க்கிறேன் ட.....

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    வாழ்த்துக்கள் சந்திர சூரியரே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement