மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது: செந்தில் பாலாஜி திட்டவட்டம்
சென்னை: ஆதார் எண்ணை இணைக்க இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. ஆதார் எண்ணை இணைக்க இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும், இதுவரை 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழக மின் வாரியம், இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படும் வீடுகள் உட்பட, 2.67 கோடி நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண்ணை இணைத்து வருகிறது. இந்த பணியை மேற்கொள்ள இம்மாதம், 28ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, இன்றுடன், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் முடிகிறது.

மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. ஆதார் எண்ணை இணைக்க இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும், இதுவரை 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (5)
MARIYAADHAI AAGA AADHAAR INAITHU VIDUNGAL.ILLAI ENDRAAL PATIYIL ADAITHU UDHAYANNA PADAM KALAGA THALAIVAN PADAM KAANBIPPAR.
டாஸ்மாக்கை மூடுவது உறுதி .....செந்தில் பாலாஜி திட்டவட்டம்.
சவுக்கு சொன்னா மாதிரி.. அடுத்த முதல்வர் ஆக எல்லாத்தகுதியும் உள்ளவர் நீங்கள்தான். வாழ்த்துக்கள். திமுக குடும்ப கட்சியில்லை என நிறுபிக்க உங்களை துணை முதல்வராக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
அதேபோல், நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த முறை நீங்கள் ஆட்சியில் அமர முடியாது. ஞாபகம் வைத்துக்கொள். உங்களுக்கும் மக்கள் கெடு வைப்பார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
டாஸ்மாக்குல சரக்கு வாங்கறதுக்கும் ஆதாரை இணைக்க கெடு விதிக்கலாமே....