கர்நாடகாவில் 2வது பெரிய விமான நிலையம்: திறந்து வைத்தார் பிரதமர் மோடி

சிறப்பம்சங்கள்:
* ரூ. 384 கோடி செலவில் 775 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
* இங்கு 3,200 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
* இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதி இடம் பெற்றுள்ளது.
* இது கர்நாடகாவில், பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையம் ஆகும்.
* எடியூரப்பாவின் 80வது பிறந்த நாளில் சிவமொக்கா விமான நிலையம் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
* இந்த விமான நிலையம் தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
வரும் காலங்களில் இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கான விமானங்கள் தேவைப்படும். பயணிகள் விமானம் இந்தியாவில் தயாரிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இரட்டை எஞ்சின் அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஷிவமொக்காவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் நகரங்களுக்கு இடையேயான இணைப்பை அதிகரிக்கும். கர்நாடகாவின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், திறந்து வைக்கவும் வந்துள்ள வாய்ப்பை நான் பாக்கியமாக கருதுகிறேன்.
ஷிவமொக்காவுக்கு சொந்த விமான நிலையம் கிடைத்துள்ளது. இது பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கிறது. இந்த விமான நிலையம் மாநில இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும். கர்நாடகாவின் பிரபல தலைவர் எடியூரப்பாவின் பிறந்தநாள்.
அவர் நீண்ட ஆயுளுடன் இருக்க நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன். அவர் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்பணித்தார். கடந்த வாரம் அவர் சட்டசபையில் ஆற்றிய உரை மக்களுக்கு உத்வேகம் அளித்தது. இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய பட்ஜெட் தொலைதூர இடங்களையும் சென்றடைவதில் எவ்வாறு கவனம் கொண்டுள்ளது என்பது குறித்த இணைய கருத்தரங்கில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகையில், நாட்டிலுள்ள பழங்குடி மக்களின் திறமைகளை பாராட்ட வேண்டும்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசின் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்வதோடு, அவை குறித்த நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஊரகம் மற்றும் பழங்குடியின பகுதியை சார்ந்த கோடிக்கணக்கான குழந்தைகள் தடுப்பூசியை பெறுவதற்காக நீண்ட காலம் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் தற்போது மிஷன் இந்திர தனுஷ் திட்டத்தின் மூலம் பெருமளவில் தடுப்பூசி சென்றடைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விவசாயிகளுக்கு உதவும் வகையில், 'பிரதமர் கிசான் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது நான்கு மாத இடைவெளியில், மூன்று தவணைகளாக, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. கடந்த, 2019 பிப்.,ல் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
இதன்படி, 13வது தவணையாக எட்டு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, மொத்தம், 16 ஆயிரத்து 800 கோடி ரூபாயை பிரதமர் மோடி இன்று(பிப்.,27) வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளியர் பங்கேற்றனர். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை, 2.25 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 'பிரதமர் கிசான் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ், , 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நாட்டில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளோம். குறிப்பாக பெண் விவசாயிகளுக்கு ரூ 50,000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தவணை ஹோலியின் வாழ்த்து. இந்தியாவின் அனைத்து விவசாயிகளும் இன்று பெலகாவி வந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (7)
? தாமரையா?..
நீங்க ஓபன் பண்ணது ஒரு ariport தான்... எங்க திமுக ஒரே நாளில் 100 டாஸ்மாக் ஓபன் பண்ணுவார்
கர்நாடகாவில் நம் தமிழக அரசியல் வியாதி வந்தவர்கள் போல் யாருமில்லையா? எதிர் கட்சிகள் அங்கு உள்ளன போனால் தெரிகிறதெ அவர்களில் திருட்டு போன்று யாருமில்லையா?
மோதிஜி இருந்தால் எதுவும் ஸாத்யம்
புதிதாக விமான நிலையம் அரசாங்கத்தால் திறப்பது பெரிதல்ல ,அதை தனியாருக்கு விற்காமல் இருக்கணும் ....