இந்திய ரோட்டோரக் கடையில் ரசித்து ருசித்து டீ குடித்த ஜெர்மனி பிரதமர்: புகைப்படங்கள் வைரல்
புதுடில்லி: இந்தியாவுக்கு வந்த ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அரசு முறைப்பயணமாக கடந்த பிப்., 25ம் தேதி இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ்க்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு, வர்த்தகம், உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசினை மேற்கொண்டனர்.
இதையடுத்து ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் கூறுகையில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. வன்முறையின் வாயிலாக, எந்த ஒரு நாட்டின் எல்லையையும் மாற்ற முயற்சிப்பதை ஏற்க முடியாது எனக் கூறினார்.
இந்தியாவுக்கு வந்த ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்தினார்.

ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர் கடையில், தேநீர் அருந்திய புகைப்படங்களை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரகம் தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ருசியான கப் தேநீர் இல்லாமல் இந்தியாவை எப்படி சுற்றிப்பார்க்க முடியும்?. தெரு முனையில் உள்ள டீக்கடைக்கு பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ்யை நாங்கள் அழைத்துச் சென்றோம். நீங்கள் அனைவரும் அங்கு செல்ல வேண்டும்! இந்தியாவின் உண்மையான சுவை இது தான் எனக் ஜெர்மனி தூதரகம் கூறியுள்ளது.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் இந்த புகைப்படம் நாட்டில் உள்ள பணக்காரர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வாசகர் கருத்து (9)
டீக்கும் எல்லா நாட்டு பிரதமர்களுக்கும் அப்படி ஒரு பிணைப்பு....
அவருக்கும் நம்ம பிரச்சினை போல... அதாவது அவங்க மனைவியும் சரியா, டேஸ்ட்டா, சுவையா டீ போட மாட்டாங்க போல... அவர் மனைவியின் டீ குடித்து நாக்கு செயல் இழந்திருக்கும். இந்திய ரோட்டோரக் கடை டீ மிகவும் சுவையாக இருக்கும் என்று கேள்வி பட்டிருப்பார். அதான் இப்படி. வாழ்த்துக்கள் தலைவா.
ரோட்டோர பாய்லர் டீ சுவையே அலாதியானது
என்ன இருந்தாலும் மார்க்ஸ் உதித்த மண்ணின் வேந்தனாயிற்றே.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஜெர்மனியில் அரசியல் தலைவர்கள் மிக சாதாரணமாக வாழ்பவர்கள். நான் முன்னாள் சான்சலர் மேர்க்கெல் அவர்களை பதவியில் உள்ள போதே பெர்லினில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு முறை மளிகை சாமான்கள் வாங்குவதை பார்த்துள்ளேன். நம்ம ஊரு ஸ்டாலின், உதயநிதி போல அச்சுறுத்தல் இல்லாதபோதே அவ்ரகளுடைய அரசியல் வாழ்க்கைக்கும், சம்பளத்திற்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லாத மிக அதிக விலையுள்ள கார்களில் வந்து பந்தா காட்டுவதில்லை.