நாட்டுக்காக நடந்தேன்: ராகுல் பேச்சு

கூட்டத்தில் காங்., எம்.பி ராகுல் பேசியதாவது: பாரத் ஜோடோ யாத்திரையின் போது நான் நிறைய கற்றுக்கொண்டேன். கன்னியாகுமரி - காஷ்மீர் வரை தேசத்திற்காக நடைப்பயணம் மேற்கொண்டேன். யாத்திரையின் போது ஆயிரக்கணக்கானோர் என்னுடன் இணைந்து நடைபயணம் செய்தனர். அப்போது விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளையும் கேட்டறிந்தேன், அவர்களின் வலியை உணர்ந்தேன்.
பிரதமர் மோடி 15-20 பாஜ., வினருடன் லால் சவுக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். ஆனால் நான் லால் சவுக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றியபோது என்னுடன் ஆயிரக்கணக்கானோர் இருந்தனர். தொழிலதிபர் அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என பார்லி மென்டில் நான் கேள்வி எழுப்பினேன்; ஆனால், அதற்கு பதில் இல்லாமல், அமைச்சர்கள் அந்த தொழிலதிபரை பாதுகாத்து பேசி வருகின்றனர்.
சீனா மிகப்பெரிய பொருளாதாரம் கொண்டது; நாம் எப்படி அவர்களுடன் சண்டையிட முடியும்?” என அமைச்சர் ஜெய்சங்கர் பேசியது, தேசியவாதம் அல்ல. ஆங்கிலேயர்களுடன் போரிடும் போது நமது பொருளாதாரம் மிகப் பெரியதாக இருந்தது.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பிரியங்கா பேசியதாவது:
தேர்தலின் போது, பொதுமக்களுக்கு தேவையில்லாத பிரச்னைகள் எழுப்பப்படுகின்றன. வேலையில்லாத் திண்டாட்டத்தை எப்படிச் சமாளிப்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதில் அரசியல் இருக்க வேண்டும். ஆனால் பா.ஜ., எங்கள் மீது ரெய்டு நடத்தி அரசியல் செய்கின்றனர். ஆனால் நாங்கள் வலுவாக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
உற்சாகம்:
காங்., எம்.பி சசி தரூர் பேசுகையில், இந்திய மக்கள் எங்களிடம் ஆதரவை எதிர்பார்க்கிறார்கள் என குறிப்பிட்டு பேசினார். இது கூட்டத்தில் இருந்த காங்., தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து (29)
பப்பு நீ உன் கால் மூட்டுவலிக்கு நடந்ததாக தானே நினைத்தோம்?
இதை பச்சப்புள்ளைங்க கூட நம்பாது
நாட்டுக்காக நடக்கவில்லை. உன் குடும்பம் 👪 மேல் உள்ள வழக்குகள், உன் கட்சியின் நிலை, உன் குடும்பம் மேன் மேலும் சுருட்ட அடுத்த வாய்ப்பு இது போன்ற உங்கள் சுய நலத்திற்காக கேரவன் 🚶 நடைபயணம் செய்தீர்கள். எதிர் பார்த்த பலன் கிடைக்க வில்லை. உங்கள் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் கூட சரியாக கலந்து கொள்ள வில்லை. நடைபயணம் பிரேசனமில்லை பப்பு.
ஆமாம். நீ நடந்தால், பேசினால், ... பாஜக வேகமா வளருது, நாடும் நல்லாருக்குது.
கடந்த 75 ஆண்டு எங்க ஊழல் ஆட்சியால் எனக்கு தற்போது எந்த வேலையும் இல்லை, எனவே இந்தியா முழுதும் காணாமல் போய்விட்ட கட்சியை தேடிச்சென்றேன் என சொன்னால் சிறப்பாக இருக்கும்.