வடக்கே எருமை மாடு: தெற்கே கல்வீச்சு: வந்தே பாரத் ரயிலுக்கு நேரும் தொடர் பரிதாபம்

குஜராத் மாநிலம் அமதாபாத் நகர் அருகே வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்த போது 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது மோதி அவர் பலியானார். தொடர்ந்து கைரத்பூர் மற்றும் வத்வா ரயில் நிலையங்கள் இடையே வந்தே பாரத் ரயில் இஞ்ஜின் மீது எருமை மாடு மோதியது. இச்சம்பவத்தின்போது ரயில் இன்ஜின் சேதம் அடைந்தது.
அதே மாநிலம் வல்சாத்தில் உள்ள அதுல் ரயில்வே ஸ்டேஷன் அருகே மீண்டும் ஒரு தடவை மாடு முட்டியதில் இன்ஜின் சேதம் அடைந்தது. இந்த முறை முட்டிய மாடு பசு.
இது மட்டுமல்லாது டான்கவுர் மற்றும் வயர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கிடையே ரயிலின் சக்கரம் 'ஜாம் ' ஆகி விட்டதால் ரயிலை இயக்குவதில் சிக்கலை எதிர்கொண்டது. தொடர் விசாரணையில் ரயிலின் ஒரு பெட்டியில் இழுவை மோட்டாரில் குறைபாடு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
மும்பை சென்ட்ரல் மற்றும் காந்திநகர் இடையே ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், எருமை மாடுகளுடன் மோதியதில் சேதம் அடைந்தது
ஆறு மாதங்களில் 68 விபத்து
கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாத காலகட்டத்திற்குள்ளாக விலங்குகளால் மட்டும் 68 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கல்வீச்சு தாக்குதல்
இந்தாண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி மால்டா அருகே ஹவுரா நியூஜல்பைகுரியை இணைக்கும் ரயில் மீது கல்வீசப்பட்டது. ரயில் சேவை துவங்கிய நான்காவது நாளில் இச்சம்பவம் நடந்தது. ஜனவரி 3-ம் தேதி டார்ஜிலிங்கின் பன்சிதேவா பகுதி அருகே நடத்தப்பட்ட கல்வீச்சில் வந்தே பாரத் ரயிலின் இரண்டு ஜன்னல்கள் சேதம் அடைந்தன.
ஜனவரி மாதம் 19 ம் தேதி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடியால் துவக்கிவைக்கப்பட்ட ரயிலின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் அனுப்குமார் கூறுகையில், ரயில் சோதனை ஓட்டத்திற்காக வந்தபோது காஞ்சரபாலம் என்ற இடத்தில் மர்ம நபர்களால் கல்வீச்சுநடத்தப்பட்டது என்றார்.
சென்னை பெங்களூரு வந்தே பாரத் மீது தாக்குதல்
இந்நிலையில் தற்போது 25-ம் தேதி கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்மநபர்கள் நடத்திய கல்வீச்சு தாக்கதலில் சுமார் ஆறு ஜன்னல்கள் சேதமடைந்தது.இதில் இரண்டு ஜன்னல்கள் மிக அதிகமாக சேதம் அடைந்துள்ளன. இதனை சீரமைப்பதற்கான செலவு அதிகம் என பெங்களூரு கூடுதல் டிவிஷன் ரயில்வே மேலாளர் குசுமா ஹரிபிரசாத் தெரிவித்து உள்ளார்.
தென் மாநிலங்களில் முதல் முறையாக பயணத்தை துவக்கிய வந்தே பாரத் ரயில் இது என கூறப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விமானம் போன்ற பயண அனுபவங்களை வழங்குகிறது. இம் மாதிரியான ரயில்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் எனவும் , எக்ஸ்கியூட்டிவ் கோச்சுகளில் இருக்கைகள் 180 டிகிரி சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
வாசகர் கருத்து (33)
அரசியல்வாதிகள் அரசு ஊழியர்களின் குற்றங்களுக்கு தண்டனையை அதிகரித்தால், மக்கள் தானே திருந்துவார்கள்...
கல் எறிந்த நபர்கள் வசமாகப் பிடிபட்டால் கற்களால் அடித்து காயப்படுத்தினால் தான் அவர்களுக்கு அந்த வலி தெரியும் ....
ஒரு நாட்டின் தரம் அந்த நாட்டு மக்களின் நடத்தையின் தரத்தை சார்ந்தே இருக்கும்.
திருமா அண்ணன் இப்பொழுதெல்லாம் ஒரு முழு தி.மு.க. வினுடைய சொம்பாகவே மாறிவிட்டார். இரண்டு சீட்டுக்கும் மூணு சீட்டுக்கும் நக்கிப்பிழைப்பதெல்லாம் ஒரு பிழைப்பா?
அரசியல்வாதிகள் அரசு ஊழியர்களின் குற்றங்களுக்கு தண்டனையை அதிகரித்தால், மக்கள் தானே திருந்துவார்கள்...