ஈரோடு: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது பற்றி மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என, ஈரோட்டில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அறிவித்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என தவறான தகவலை தெரிவிக்க விரும்பவில்லை. திமுக., ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் கூறி வருகிறார்.
நான் இப்போது ஆதாரத்தை குறிப்பிட்டதை அவர் பார்க்கவேண்டும். இவையெல்லாம், எதிர்க்கட்சி தலைவர் கண்களுக்கு தெரியவில்லை என்றால், கண்டாக்டரை பார்த்து கண்ணாடி போட்டு படித்து பாருங்கள்.
நான் பேசியதையாவது கேட்டு பாருங்கள். இது உண்மையா, இல்லையா என சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேட்டு பாருங்கள்.

85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். இன்னும் வாக்குறுதிகள் உள்ளன என்பதை மறுக்கவில்லை. 5 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய பணிகளை தான் வாக்குறுதிகளாக சொல்லி உள்ளோம். எங்களுக்கு 5 ஆண்டுகள் தேவையில்லை. இந்த ஆண்டுக்குள் அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவேன்.

தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்குவோம் எனக்கூறினோம். நீங்கள் நிதிநிலையை சரியாக வைத்திருந்தால், அதனை உடனடியாக நிறைவேற்றி இருப்போம். ஆனால், கொள்ளையடித்ததுடன் மட்டுமல்லாமல், கஜானாவை காலி செய்துவிட்டு, கடன் வாங்கி சென்றுள்ளீர்கள்.
அதையெல்லாம் சரி செய்து கொண்டுள்ளோம். அதை சரி செய்த உடன், மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், உரிமை தொகை எப்போது வழங்குவோம் என அறிவிக்க போகிறோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து (56)
ஸ்டாலின் உறுதிமொழி எல்லாம் எடுக்கிறார்.விசித்திரமாக உள்ளது. மக்களை ஏமாற்றுவதில் மிக 'உறுதியாக' உள்ளார் இந்த ஸ்டாலின். போன தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற துப்பில்லை. இப்ப மீண்டும் உறுதிமொழி. இந்தமுறை தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என நம்புகிறேன்.
வருஷம் போட்டிருக்கா என்று ஒருவர் சொல்வார்
இப்படி இறுதி பிரச்சாரத்தில் ஒரு நாட்டின் முதவரே அவர் அவையில் சமர்ப்பிக்கும் பட்ஜெட் வருமுன் அதை வெளி கொண்டுவந்து மக்களிடையே தேர்தல் பிரச்சாரத்தில் வெளியிடலாமா? மக்களே நீதி சொல்லுங்கள்? மன்றங்கள் நீதி கூற அறவே மறுத்துவிடும். தேர்தல் அலுவலகத்தின் வேலை என்றே கூறிவிடும்.
Normally during election time no new announcements are to be done. But here CM is tipping to induce votes. I am unable to understand why this was not considered as violation of election code.
பழனிச்சாமி மீசையை பற்றி சொன்ன இவர், இவர் அப்பஞ்சாமி தல முடியை பற்றின ரகசியத்தையும் சொல்லியிருக்கலாம்.