சமூக நீதி என நாடகம் ஆடுவதை தி.மு.க., அரசு நிறுத்த வேண்டும்: அண்ணாமலை

அவரது அறிக்கை:
மத்திய அரசு ஆண்டுதோறும், பட்டியல் பிரிவு மக்கள் முன்னேற்றத்துக்காக, மாநிலங்களுக்கு பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது. அப்படி ஒதுக்கப்பட்ட நிதியில், 2016 முதல், 2021 வரை, 2,900 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
நடப்பு நிதியாண்டில், டிசம்பர் வரையிலான தகவலின்படி, மத்திய அரசு தமிழகத்தின் பட்டியலின சகோதர, சகோதரிகளுக்கு ஒதுக்கிய, 16 ஆயிரத்து, 442 கோடி ரூபாய் நிதியில், தமிழக அரசு, 10 ஆயிரத்து, 466 கோடி ரூபாயை செலவிடாமல் வைத்துள்ளது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சிக்கு உள்ளானேன்.
கல்வி, வீட்டு வசதி திட்டங்கள், வேலைவாய்ப்பு, மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படை தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும், முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பது, தி.மு.க., அரசின் மெத்தனத்தையும், சமூகத்தில் பின் தங்கியிருக்கும் மக்கள் மீதான கடும் அலட்சிய போக்கையும் காட்டுகிறது.

பெயரளவில் சமூக நீதி என்று மேடை மேடையாக நாடகம் ஆடுவதை நிறுத்தி விட்டு, பட்டியல் இன சகோதர, சகோதரிகள் முன்னேற்றத்துக்காக, பிரதமர் மோடி முன்னெடுத்து வரும் நல திட்டங்களை செயல்படுத்த, தி.மு.க., அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (36)
பட்டியல் இன சகோதர, சகோதரிகள் முன்னேற்றத்துக்காக...//// ஒண்ணே ஒண்ணு செய்க.... . இவங்கள சகோதர, சகோதரி..ன்னு கூவுற இல்ல....இவங்கள மேல்சாதிக்காரனுங்க வீட்டு உள்ளாரகூட வேண்டாம், திண்ணைல நீயும், உன் கட்சியும் உட்கார வச்சிடு... அப்ப, நீயும் உன் கட்சியும் இன்னா சொன்னாலும் கேக்குறோம். அது முடியாது. அதை செய்யறதே உங்க கட்சிதானய்யா... சும்மா நீயும், உன்ன மாதிரி ஆட்களும்.... அரசியல் ஆதாயத்துக்காக அவங்க வீட்டுக்குள்ளார போயிட்டு... சாப்பிட்டுவிட்டு சீன் போடுறீங்க...
வளர்ச்சி என்ற நாடகத்தை நீங்கள் மட்டுமே நடந்த வேண்டும் .மாற்ற வர்கள் செய்தல் அது தவறு.
தான் பார்ப்போம்....
குரூப் 2 தேர்வில் குழறுபடி.....100 கல்வி அறிவு மாநிலம்....
திமுக நாடகம் ஆடக்கூடாது என்று சொல்லி அவர்கள் வாழ்விலே மண்ணை அள்ளிப்போடுவது தவறு??? அவர்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாமே நாடகம். நாடகம் இல்லையேல் அவர்கள் வாழ்வே இல்லை இது தான் திராவிட நாடகம் அதாவதுஇ அவர்கள் சொல்லும் திராவிட மாடல் என்பது