கொரோனா தடுப்பூசி பிரசாரம்: அமெரிக்க பல்கலை பாராட்டு

இதில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று பரவல் காலத்தில், இந்தியாவில் பெரு நகரங்களில் இருந்து, கிராமப்புறங்கள் வரை மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர்.
தொற்று பரவலை தடுப்பது, பாதிப்பு ஏற்பட்டோரை தனிமைப்படுத்துவது, மருத்துவ சிகிச்சை அளிப்பது என, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டது. அதேபோல, கொரோனா தடுப்பூசியை நாடு முழுதும் இலவசமாக வழங்கி, குக்கிராமங்கள் வரை தகுதியான அனைவருக்கும் இரண்டு 'டோஸ்'கள் செலுத்தப்பட்டன. மேலும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் வாயிலாக,34 லட்சம் மக்களை இந்திய அரசு காப்பாற்றிஉள்ளது.

இப்படி தடுப்பூசிகளை விரைவாக செலுத்தி நாட்டு மக்களைக் காப்பாற்றியதால், மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா வெகுவிரைவிலேயே இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால், அந்நாட்டின் பொருளாதாரம் 1.53 லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தும் தப்பியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (9)
நிஜத்தில் கொரோனா வால் இறந்தவர்கள் எண்ணிக்கை கணக்கே மத்திய பாஜக அரசிடம் முழுமையாக கிடையாது, இந்த லட்சணத்தில் காப்பாற்றப் பட்டவர்கள் எண்ணிக்கை முப்பத்து நான்கு லட்சம் என்று எப்படி இவரால் கணிக்க முடிந்தது?
நிஜத்தில் கொரோனா வால் இறந்தவர்கள் எண்ணிக்கை கணக்கே மத்திய பாஜக அரசிடம் முழுமையாக கிடையாது..... இந்த லட்சணத்தில் காப்பாற்றப் பட்டவர்கள் எண்ணிக்கை முப்பத்து நான்கு லட்சம் என்று எப்படி இவரால் கணிக்க முடிந்தது
பாஸ், செங்கல் பட்டுல ஊசி தயாரிச்சி உலகுக்கே விடியல் தந்த ......விடியல் சாருக்கு ஒன்னும் இல்லையா
காங்கிரஸ் ஆட்சியில் கோவிட் வந்திருக்குமானால் ஜார்ஜ் சொரோஸ் நடத்தும் நிறுவனத்திடம் ஆளுக்கு 100 டாலருக்கு தடுப்பூசி வாங்கி போட்டிருப்பார்கள். பெட்ரோல் ரூ 200 க்கு விற்றிருக்கும். இந்தியா திவாலாகியிருக்கும் - பாக்கிஸ்தான் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வெற்றிகரமாக தீவிரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பிக்கொண்டு இருந்திருப்பார்கள்...
அமெரிக்க பல்கலைக்கு புரிகிறது இந்தியாவை பற்றி. ஆனால், இங்கே உட்கார்ந்துகொண்டு தண்ட சோறு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் ஒரு சில தேச துரோகிகளுக்கு இந்தியாவை பற்றி சரியாக புரியவில்லையே. புரியாவிட்டால் போகட்டும்.