உருவாகி விட்டது ஈரோடு கிழக்கு பார்முலா!
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:...
கி.பழனி, துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஈரோடு கிழக்கு சட்ட சபை தொகுதியில் நடக்கும் கூத்துக்களைப் பார்த்தால், இனி எதிர்காலத்தில், எம்.எல்.ஏ., ஒருவர் மரணமடைந்தால், அவரது தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தாமல், பக்கத்து தொகுதி பிரதிநிதியையே கூடுதல் பொறுப்பாக கவனித்துக் கொள்ளும்படி, தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என்பது போன்ற நிலைமை உள்ளது.

ஓட்டுச்சீட்டு முறை இருந்த போது, கள்ள ஓட்டுப் போட்டு, அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றன. அதன்பின், ஓட்டுச் சாவடியை கைப்பற்றி, ஓட்டுச் சீட்டுகளில் மொத்தமாக முத்திரை குத்தி, தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணைத் துாவி வெற்றி பெற்றன. அடுத்த கட்ட வளர்ச்சியாக, இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் இருந்தால், அவர்களது ஓட்டுகளை போட்டு, வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தன.
அவற்றின் நீட்சியாக, தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில், குழந்தைகளை கடத்துவது மாதிரி, வாக்காளர்களை கடத்திச் சென்று ஓரிடத்தில் அடைத்து வைத்து, காலை முதல் இரவு வரை காபி, காலை உணவு, மதிய உணவு, பிரியாணி, 'குவார்ட்டர்' மாலை டிபன், மாலை இரண்டாவது ரவுண்டுக்கு சரக்கு, அதற்கு, 'சைடு டிஷ்' பின் இரவு உணவு, கையில் காசு அனைத்தும் கொடுத்து, தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஓட்டளிக்க, 'காபந்து' பண்ணி வைத்துக் கொண்டிருக்கின்றன, தி.மு.க., கூட்டணிக் கட்சிகள்.
அதனால் தான், 'பொதுமக்களை தேர்தல் பிரசார களத்துக்கு அனுப்பக்கூடாது என்பதற்காக, பட்டி பட்டியாக அடைத்து வைக்கின்றனர், ஆளுங்கட்சியினர். இந்தியாவில் இதுபோல எங்கும் நடந்தது கிடையாது' என்று, குற்றம் சாட்டியுள்ளார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.

கடந்த காலங்களில், தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளிடம் பல்வேறு விதமான பாடங்களை கற்று தெரிந்து கொண்டுள்ளது; அதில், இது மற்றொரு வகை!
திருமங்கலம் இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்து, வேட்பாளரை வெற்றி பெற வைத்தது, இன்று வரை பெரிய அளவில், 'திருமங்கலம் பார்முலா' என, பேசப்படுகிறது. அதுபோல, தற்போது வாக்காளர்களை பட்டிகளில் அடைத்து வைத்து, வேடிக்கை காட்டுகின்றன, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள். இந்த அசிங்கமான முறை, 'ஈரோடு கிழக்கு' பார்முலா என, வரும் நாட்களில் அழைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
வாசகர் கருத்து (46)
எளிமையும் நேர்மையாக அரசியல் செய்தவர்களை எல்லாம் இந்த வாக்காளர்கள் தான் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினார் .இனி எப்படி அரசியல்வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியும்
Makkalai shed il adaiththu vaithullaakalaame ithu ennada puthusaa
It is very sad that Election Commission is not able to sense any of the tipping events in spite of person being stationed there. either they need more training or medias are telling Green lie.
இப்போது நடக்கும் கூத்துக்களை அன்றே கணித்து தான் ஒரே ஒரு உண்மையை பெரியார் 21ம் பக்கத்தில் முன்னேற்ற கழக காரன் பதவிக்காக எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்வான் என்று கூறியது உண்மையாகி விட்டது இருந்தாலும் இன்னும் மக்கள் மாக்களாக இருப்பது தான் வேதனை.
நான் காசு கொடுத்து.. பலர்.. எனக்கு.. வாக்கு.. அளிக்கிறார்கள்.. எனில்.. அது.. எனக்கு வேண்டாம்... நான்.. செய்த.. நல்ல.. செயலுக்காக.. வாக்களித்தால்.. மட்டுமே.. எனக்கு பெருமை... நான்.. ஒரு சாதாரண மனிதன்... உங்களுக்கு.. அள்ளித்தர ஆசைதான்.. ஆனால்.. என்னிடம்.. இல்லை.. உங்கள்.உழைப்பு.. எனக்கு தேவையில்லை.. என் உழைப்பில்.. என் மனைவி.. குழந்தைகளை.. காப்பாற்றுவதே.. எனக்கு..பெருமை.. தமிழன்..,