ADVERTISEMENT
நெட்ஃப்ளிக்ஸ் தனது சந்தா விலையை 50 சதவீதம் வரை குறைத்துள்ளதாக அறிவித்திருக்கிறது.
உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். லாக்டவுன் காலத்திற்கு பிறகு இதன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததால், நெட்ஃப்ளிக்ஸின் வளர்ச்சி அமோகமாக இருந்து வருகிறது. சமீபத்தில் பாஸ்வேர்டு பகிர்வு குறித்து சில கட்டுப்பாடுகளை விதித்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் சந்தா கட்டணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு உலகின் சுமார் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமலுக்கு வந்துள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் அதன் வருவாய் மற்றும் சந்தாதாரர் வளர்ச்சியை அதிகப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்த விலை குறைப்பு மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி 12 நாடுகளில் குறைந்த விலை சந்தா திட்டங்களை நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. இதுதவிர சந்தாதாரர்கள் தங்களின் லாக்-இன் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோருக்கு புதிய மாதாந்திர கட்டணத்தையும் நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.

தற்போதைய விலை குறைப்பு மத்திய கிழக்கு, ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆசியா , துணை சகாரா ஆப்ரிக்க பகுதிகள் ஆகிய இடங்களில் அமலுக்கு வந்துள்ளது. அதுபோக, நெட்ஃப்ளிக்ஸ் ஏற்கனவே கொண்டு வந்த பாஸ்வேர்டு பகிர்வு குறித்த கட்டுப்பாடுகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, IP முகவரிகள், டிவைஸ் ஐடி மற்றும் அக்கவுண்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்டவைகளை டிராக் செய்து பாஸ்வேர்டு பகிரப்படுவதை தடுக்க முயற்சித்து வருகிறது.

புதிய கட்டண முறை லத்தீன் அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வந்ததை அடுத்து கனடா, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. கனடா மற்றும் நியூசிலாந்தில் புதிய கட்டணம் 8 டாலர்கள், போர்ச்சுகலில் 4 டாலர்கள், ஸ்பெயினில் 6 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கட்டணங்கள் அமெரிக்காவில் இந்த ஆண்டே அமலுக்கு வரவுள்ளது. மேலும், இந்த புதிய கட்டண முறையால், டிஸ்னி பிளஸ், ஹூலூ மற்றும் ஸ்லிங் டிவி உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் எனக் கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (2)
வேறு வழி என்ன ??? போணியாகல ...விலையைக் குறைச்சுதான் ஆகணும் .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
This offer is not applicable in India..