உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
எம்.முத்தையா, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள், பிரதான கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைக்க முற்படும் போது, வெட்கம், மானம், சூடு, சொரணை போன்ற அனைத்தையும் விசிறி கடாசி விட்டே, பேச்சு வார்த்தையை துவக்குகின்றன. இதன்படி, 2021 சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., அந்தத் தேர்தலில், தி.மு.க., வென்று ஆட்சியில் அமர்ந்ததால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஆயத்தமாகி உள்ளது.
அதற்காக, இதுவரை முதல்வர் ஸ்டாலினை மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளார், பா.ம.க., தலைவர் அன்புமணி. ஆனால், சந்திப்பு பற்றி வெளியில் சொல்லும் போது, 'வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான தரவுகளை திரட்டும் பணியை விரைவுபடுத்தும்படி, முதல்வரிடம் வலியுறுத்தினோம்' என்று கயிறு திரிக்கிறார்.

ஹிந்துக்களுக்கு எதிரான அரசியல் கட்சி, தி.மு.க., என்பது வெள்ளிடை மலை. ஆனால், வன்னியர்களுக்காகவே துவங்கப்பட்ட அரசியல் கட்சி என்றால், அது, பா.ம.க., தான். அத்துடன், 'வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை' என்ற கோஷத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்த கட்சியும் அதுவே. மறக்க முடியுமா அந்த கோஷத்தை!
மரத்துக்கு மரம் தாவி நிறம் மாறும் பச்சோந்தி போல, தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் பச்சோந்தி வேலையை, பா.ம.க., மீண்டும் துவக்கி விட்டது. எனவே, ஓட்டுரிமை பெற்ற வாக்காளர்கள், இது போன்ற சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகள், எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும், அவர்களுக்கு ஓட்டளிக்காமல் ஓரங்கட்ட வேண்டும்.
அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களை மண்ணை கவ்வச் செய்ய வேண்டும். இந்த நிலைமை ஏற்படும் வரை, கூட்டணிகளுக்கு கொண்டாட்டம், வாக்காளர்களுக்கு திண்டாட்டம் தான்.
வாசகர் கருத்து (19)
Vanniyars should boycott this family running party. Vanniyars should understand that Mr.Ramadas use your vote bank for their family gain, not for you, Vanniyars. Please boycott this family
துண்டு ஆட்டும் தலைவர் எந்த தலைமைக்கு எதிராக கட்சி தொடங்கியது இப்போ சொம்பு தூக்குகிறார் மத்தியிலும் ஒரு மும்பை பண்ணாடை இப்படித்தான்
அனைத்துக் கட்சியினருமே பச்சோந்திகள்தாம் .... ஆனாலும் இதில் சரித்திரம் படைத்தவை திமுகவும் இன்றைய அதன் கூட்டணிக் கட்சிகளும்தாம் ....
மரங்களை வெட்டி சாய்பதை தொழிலாக கொண்டுள்ள பாமக விடம் வெட்கத்தைப்பற்றி பேசுவது நமக்கு அவமானம். நாம்தான் அவர்களைப்பார்து வெட்கபடவேண்டும்.
தங்கள் சுயநலத்துக்காக கட்சி மாறும் இந்த மனித பச்சோந்திகளை பார்த்து, அந்த பிராணி பச்சோந்திகள் தங்கள் நிறம் மாறும் செயலை நிறுத்திவிட்டனவாம்.