சிவசேனா வழக்கு : தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
புதுடில்லி: ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் சிவசேனா பெயர், வில் அம்பு சின்னம் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், 55 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில், உத்தவ் மீது அதிருப்தி அடைந்த 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக பிரிந்தனர். பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார். சிவசேனா கட்சிக்கு ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பு உரிமை கோரி வந்தது.

கடந்த 2019ல் நடந்த தேர்தலில் மக்களின் ஓட்டுகளை பெற்ற 76 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் ஷிண்டேவின் பக்கம் இருப்பதால், அவரது அணியே உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கியது. இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று(பிப்.,22) விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா பெயர், வில் அம்பு சின்னம் ஒதுக்கியதற்கு இடைக்காலதடை விதிக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே தரப்பு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் ஷிண்டே தரப்பு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாசகர் கருத்து (7)
ஒரு கட்சி பிரிந்தால், அல்லது பிளந்தால் அதன் சொத்து முழுவதும் மாநில கட்சி என்றால் மாநில அரசுக்கும் தேசிய கட்சி என்றால் மத்திய அரசுக்கும் போய் சேரும் என்று சிம்பிளாக ஒரு சட்டம் கொண்டு வந்தால் போதும் 😀
வரும் தேர்தலில் சிண்டேயை விட உத்தம் தாக்கரே அதிகம் வாக்கு வாங்கினால் தேர்தல் கமிஷன் என்ன செய்யும்? இடையில் நடந்த தேர்தல்களில் வாங்கிய வாக்கை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை, இவ்வளவு அவசரத்தில் கட்சியை செல்வாக்கில்லாதவரிடம் ஒப்படைக்க வேண்டிய அழுத்தம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி மக்களிடம் இருக்கிறது.
இடைத்தேர்தலில் நிற்காமல் பயந்து ஓடிய ஷிண்டேவுக்கு உண்மையான சிவா சேனா என்ற பெயர் வில் அம்பு சின்னம். வெற்றி பெட்ரா உத்தவ் தாக்கரே இடம் இருந்து கட்சி பெயர் மற்றும் சின்னத்தை புடுங்கி கொடுத்த தேர்தல் ஆணையம் அதை சரி என்று கூறும் நீதி மன்றம் .வாழ்க ஜனநாயகம் . தேர்தலில் நிற்க பயந்து ஒளிந்து கொண்ட ஷிண்டே கட்சி தலைவர் .இது நம்பிய பன்னீர் செல்வதை ஏமாற்றியதை விட கொடுமை
தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து திமுக பிரைவேட் லிமிடெட் போன்ற 🙃எல்லாக் கட்சிகளிலும் பரம்பரை ஆதிக்கத்தை தடை செய்ய வேண்டும்.
பதவிக்காக உங்க அப்பாவின் கொள்கைகளையே காற்றில் பறக்கவிடுவீர்கள். உங்களுக்கு கட்சி ஒரு கேடா? அதிகாரத்திற்கான நண்பன் முதுகில் குத்தும் உங்களுக்கு விடிவுகாலம் இல்லை.