Load Image
Advertisement

சிங்கப்பூர்-இந்தியா இடையே பணப் பரிமாற்ற இணைப்பு - யாருக்கு லாபம்?

Money transfer link between Singapore and India - who get benefited?  சிங்கப்பூர்-இந்தியா இடையே பணப் பரிமாற்ற இணைப்பு - யாருக்கு லாபம்?
ADVERTISEMENT
டிஜிட்டல் பேமன்ட் ஆப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருந்த இடத்திலேயே பணம் அனுப்ப வசதியாகவும், எளிதாகவும் இருப்பதால், பலரும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் டெபிட் கார்டு பயன்படுத்தும் வசதி குறைந்தது.

இந்தியா முழுவதும் நடைபெற்று வந்த சேவையை நாடுகளுக்கு இடையில், விரிவாக்கம் செய்யப் பல கட்ட முயற்சிகள் நடைபெற்று வந்தன. அதற்குப் பலனாக தற்போது இந்தியா- சிங்கப்பூர் இடையே பணப்பரிவர்த்தனை செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
Latest Tamil News இந்தியாவின் யூபிஐ (Upi) மற்றும் சிங்கப்பூரில் உள்ள பே நவ் (pay now) இணைப்பை இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் லீ சியன் லூங் முன்னிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தொடங்கி வைத்தனர்.

யூபிஐ (Upi-pay now) பே நவ் இணைப்பு மூலம் இரு நாடுகளில் இருக்கும் மக்கள் தங்களது உறவினர்களுக்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும், குறைந்த கட்டணத்தில் பணத்தை அனுப்ப முடியும். வங்கிக் கணக்குகள், இ-வாலட், யூபிஐ ஐடி, செல்போன் எண், விர்ச்சுவல் பேமண்ட் முகவரி வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பணத்தை அனுப்பவோ, பெறவோ முடியும்.
Latest Tamil News இதன்படி எஸ்பிஐ, ஐஓபி, இந்தியன் வங்கி, ஐசிஐசிஐ வங்கி இந்த சேவையின் மூலம் பணத்தை பெறும்,அனுப்பும் வசதியைப் பெறவுள்ளது. சிங்கப்பூரிலும் கிளைகளை வைத்துள்ள ஆக்சிஸ் வங்கி, டிபிஎஸ் வங்கி சிங்கப்பூர் கணக்கிலிருந்து, இந்திய கணக்கிற்குப் பெற முடியாது. இந்த சேவையை சிங்கப்பூரில் உள்ள டிபிஎஸ்- சிங்கப்பூர் மற்றும் லிக்யூட் குரூப் (Liquid group)ஆகிய இரண்டு வங்கிகள் மட்டுமே பணத்தை பெறவும், அனுப்பவும் உள்ளது.

இந்த சேவை மூலம் சிங்கப்பூரிலிருந்து ஒரு நாளைக்கு 1000 டாலர்கள் அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில், ரூ.60ஆயிரம் வரை அனுப்ப முடியும். இந்த தொகை விரைவாகப் பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.
Latest Tamil News குறிப்பாக இந்தியாவில் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கு, சிங்கப்பூரில் டிபிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்குப் பணம் அனுப்ப முடியும். இந்த சேவைக்குக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இது வங்கிகளுக்கு வங்கி மாறுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பணியாற்றுவோர் இந்தியாவில் உள் உறவினர்களுக்கும், சிங்கப்பூருக்குப் படிக்கச் செல்வோருக்கு இந்தியாவில் உள்ள உறவினர்கள் பணம் அனுப்ப வசதியாக இருக்கும்.
Latest Tamil News இந்த சேவையின் முதன் கட்டமாக வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. மேலும் இதில் ஆக்சிஸ் வங்கி, இந்தியன் வங்கி, எஸ்பிஐ., வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐஓபி,டிபிஎஸ் வங்கி உள்ளிட்டவை மூலம் பணம் அனுப்பலாம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement